Posts

Showing posts from April, 2020

சித்திரை முதல் நாள் - திருநாள்!

கொஞ்சம் நில்லடா பதில் சொல்லடா... தமிழா! மொழி மறந்தோம் முக மிழந்தோம் முறை மறந்தோம் நி(ரம்)றை மறைத்தோம்! வழிபாடு தளத்திலும் வாழ்வியல் கலத்திலும் இன்னும் பிற... நாகரீக மென  தமது இனம் நாலும் மறந்தோம்! ஆரிய முறைகளையும் வந்தேரி (கூட்டத்தையும்) கூற்றையும் அந்நிய மாய் என்னாது அன்மையா நெருங்கி அருமை அறியாது தமிழரின் தொன்மை மறந்தோம்! மார்தட்டிய மறவர் கூட்டமொன்று மறந்தே விட்டதா?! நமது வழி மொழி, முறை கலாச்சார ம் அத்தனை யும்... இனியும் தூங்காதே பிற மொழி தங்காதே இனி நீயும்! துயிலாதே விழித்தெழு நம்மில் மறைக்கப்பட்ட தை மாற்றப் பட்டதை மாற்றமெனச் சொல்லி மாறியதில் மகிழாதே! இனிப்புக்கு பனை வெல்லம் மறந்து வெள்ளை (சீனி) சர்க்கரை மாறியது போல் எத்தனையோ விடயங்கள் நம்முள்...நமக்குள்! உதாரணமாக தமிழர் புத்தாண்டு தமிழ் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள்! முறை மாற்றாதே முகம் மாறாதே சுயம் மறக்காதே! கேட்டறிவோம் படித்தறிவோம் தமிழர் த(ந)ம் பழம் பெருமைகளையும் கலாச்சார பண்புகளையும் நினைவு கூறுவோம்! மாறாதே - பழமை மறவாதே தமிழரென்று ஒரு இனமுண்டு தரணியிலே அதற்கு தனி இடமுண்டு! இன்று- சித்திரைத் திங்கள் முதல் நாள்! வாழ்க த...

ஆண்டு பலன்...

உலகை ஆண்டவர்களும் பாரதத்தை ஆண்ட வம்சமும்  பாரிவம்சம் சோழவம்சம் ஊறுசெய்ய வந்தவர்கள்  ஊறு செய்து பிழைப்பவர்கள்  ஊறு செய்ய உறுதுணையாக இருக்கும்  இந்த பிறமண்ணினர்கள்  போர்புரியும் மறவர்படையும்  தீவிர நோய் தொற்றால்  எமன் பாராது  ஏதும் அறியாது திடீரென உயிர் பிறியுமே மழை பெரிதாய் இராது ஏரிக்கு நீரும் வராது பஞ்சம் தலைவிரித்தாடும்  ஆதியை அண்ட  முதலாம் ஈசனை (சிவபெருமானை) அண்ட நாமம் சொல்லி  பாதம் பற்றி அண்டினால்  அவரது அடிமையாய் உலகத்தில் உயிரோடு வளம் பெறலாம்  நலம் பெறலாம் இதே வேளையில்  உழவும் உழவனும்  உயர்வு பெறுவது உறுதி உன்னதமான  உண்மையும் கூட சார்வரி ஆண்டின் பலன் இது.

புண்ணியவான்...!

இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்... பூமிக்கு பாரமாய் புண்ணிய மேதும்  பாராது புலனைந்தும் செயலிழக்காது மண்ணீல் மக்காது மனங்கள் வேர்க்காது மாணீடத்து மாக்களாய்... தமிழக  தலைநகரத்து தவறுகளாய் தறுதலைகளாய் மனித இனத்து துரோகி கள் மனம் துவளாது நெகிழாது மரப்பிண்டங்களாய் எதிலும் சேர்த்தில்லாது இன்னும் மரணீக்காது நடை பிணங்களாய் இருக்கத் தான் செய்கிறார்கள்! மனித மாண்பு   நெறி மறந்த... மரணத்திற்கு பின் மயானம் செல்லும் வழியில் மாளாது மாண்ட பல உயிர் காத்த  தன்னுயிர் நீத்த உயர்வாளர் திருவாளர் மருத்துவர் உன்னத மகத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாது - துரத்தி துயரத்திலும் துணிந்து இடையூறு செய்த அந்த- இழி பிறவிகளை எண்ணாது தள்ளவே நினைத்தேன்! நீங்கா இந்நிகழ்வு என்றும் மறையா மறவா இப்பதிவு! நோய் தொற்று காலத்தில் பல உயிர் காத்த உத்தமனுக்கே இந்நிலை! உடலடக்கம் செய்ய விடாது இடைமறித்த அந்த ஈன  இழி பிறவிகளை... உன்னத உலகில் உயிர் வாழ- தகுதியற்ற உயிரினங்கள். இனி- அரசு அதிகாரம் அங்கீகாரம் சலுகை கள் ஏதும் பெறாது தனித்து இயங்கட்டும் ஒதுக்கி வைப்போம் வாழ தகுதியற்ற ஓரினமாய் ஓங்கி அறைந்து ஒதுங்...

ஈசனின் காதலியே!

ஈசனின் காதலியே! எனை நேசமுடன்  ஆதரி நீயே! உலகை இயக்குபவனை இயங்க வைப்பவளே! செருக்கில்லா வனிதா மணியே பொறுமை கடலே பொறுத்தாலும் சுடரே! அவனது(ஈசன்) ஆசைக் குரியவளே இவனது பூசை க்குரியவளே... பற்றில்லா பந்தமதை பற்றுடன் பந்தாக்குங்கள் தொற்றில்லா சொத்தாய் சொந்த மாக்குங்கள்! புதிய நோய் தொற்றால் அவதியுறும்  என் கிராமத்து மக்களை என் இன மக்களை என் நாட்டு மக்களை இவ்வுலக மக்களை நோய் பரவாது  உயிர் குறையாது உலகை காக்க வேண்டும் தாயே! சக்தியே என் ஈசனின் காதலியே! வாசனின் சகியே சாதலூக்கு அஞ்சோம் அதற்கென உணை கெஞ்சோம்..., வீரத்தில் மாய்வோம் ப்ரிய சோகத்தில் மாய்வோம்! சோதனையிலும்                 வேதனையிலும் ருசிக்க அல்லாது புசிக்கவே உணவின்றி உயிர் விட...  உயிரை விட மாய்த்திட ஆகாது! அகவை ஏறி முதுமை கூறி உன் மலரடி தொட மரணத்தை நாட ஆவா! பார்த்திராத நோவாய் பாரதத்தை மட்டுமல்ல பார் முழவதும் பரவி உன் பாரா முகத்தால் உயர் மாய்வதென்ன பிணங்கள் கூடுவதென்ன உனை கூப்பிடாத போதும் கரம் கூப்பி குப்பிடாத போதும்... கவலை யின்றி  சிரிப்பவளே கடமை யென காப்பவளே! தொழுகைகள...

தந்தைக்கு நிகர்...

தந்தைக்கு நிக ருண்டோ! அவர்போல் உயர் வுண்டோ! அவ ர் தம் சொல் கேட்டால்... துயர்,  தாழ் வுண்டோ! அவரது - மந்திரச்சொல் மதியாதோர் எவருண்டு உயர்வு கண்டோர்... இளஞ் வயதில் நாயகனா(ய்) எருதினை(உறுதினை) வாகனமாய் கொண்டவரை... தொழாத கரமும் துவளும் வாழ்வில் கரைச் சேரா ஓடமாய் உப்பில்லா உணவாய் ஒதுங்கி இல்லத்தில் ஓரமாய்... துணிந்திராது தனித்திரு க்கும் தனியா நெஞ்சு! ஈ ரைந்து திங்கள் சும்ப்ப தில்லை  அவரதம்-கருவில்! தோள் சுமந்தே உருவில் தன்னுள் யனைத்து தன்னைப் போல்  தோற்காது உனை ஆக்க... உணர்வில் தோழனாய் வாய்க்கப்பட்ட வரமாய் வாராது வந்த- அந்த மாமணியை... பாராதே போய்விட்டோம் பல நேரம் அவர் மனம் அறியாது போனோம் அனைத்தி ருக்கும் போதும் அருகிலி ருக்கும் போதும் அவர் அருமை தெரிந் தறியும் போதும் அறிந்து தெரியும் போதும்... ஆறுதலாய் ஆர்வமாய் நெருங்க முற்பட... அவர்- ஆனந்தமாய் அன்னாந்து பார்க்கும் உயரத்தில் புகைபடமாய்... புன்சிரிப்போடு!

பலே!

பலே வெள்ளை யத் தேவா! பலே! சமுதாய விலகலில் உமது சமுதாய அக்கறையை நேற்று தொலைக்காட்சியில் கண்டேன்... என்ன ஒரு வீரம் என்ன ஒரு விவேகம் கீழ மாரட் வீதியிலும் மற்ற பிற இடங்களிலும் அத்தனை ஒரு கூட்டம்! விடுமுறை என்ற  எண்ணம் போல... மனம் காட்டமாக உள்ளது! நோய் தொற்று பிறரருக்கது நமக்கில்லை என்ற நினைப்போ  என்னவோ... என்ன ஒரு வேகம் வாங்குவதில் என்ன ஒரு மோகம் உரசிக் கொண்டு உலாவுவதில்... வேதனை வெட்கம் என்னுள்!  - இது வெகுளித் தனச் செயலா அல்லது ஆகட்டும் பார்ப்போமென ஆணவச் செயலா! இரண்டும் அர்த்தமற்ற து இதில் வெளி மாநிலத்தவரை கூறை கூறல்... நாளையே மரித்துவிட்டால் பொறியல் சாப்பிடுவது எப்படி?! நாளை மறுநாள் உலகம் அழிந்து விட்டால்... இந்த காய் கறி(னி) களை எப்படி உட்கொள்வது!? உங்கள் முயற்சி சாப்பாடு மோகத்திலா அல்லது இன்றைய நிலையை மோசமாக்  குவதிலா... உங்களது நன்நடத்தை எனக்கு புரியவில்லை நண்பர்களே! உங்களை கவனியுங்கள் உங்களைச் சுற்றி கவனியுங்கள்... நோய் தொற்றை பரவாது தடுக்க ஒரு கூட்டம் பரவிய நோயை குணப்படுத்த ஒரு கூட்டம் பரவுமோ என அஞ்சி தனிமை படுத்தி பாதுகாக்க ஒரு கூட்டம் இப்படி- ஒருவகை யில் முனைப்...

கட்டுப்படுவோம்...!

இன்னு மொரு பதினான்கு தினங்கள்! நிமிடங்களாக மணித்துளிகளாய் தினந் தினமாய் இரு வாரங்களாய் பாதி திங்களாய் குறை மாதமாய்... குறைந்து கரைந்து கடந்து போகும் மெல்ல நடந்து போகும்! அதிக  நோய் பரவாது சாவு கூடாது - அது மிகையாகாது மிதமாய், விரைவாய் குறை(யும்)ய... நோய் தொற்றாது மீண்டெழ மீண்டும் எழ உள்ளிருப்பேன் சமூக விலகலை கடைப்பிடிப்பேன் அரசுக்கு கட்டுப்பட்டு அசூர கொரானா வை கட்டுபடுத்த என் கடமையென மன கண்ணியத்துடன் எனது நேர்மை உண்மை ஒழுக்கம் எண்ணம் திதானம் எனை வழி நடுத்தும் என(க்கு) நிம்மதி யளிக்கும் என் பொறுமை யே எனது பெருமை! இன்றைய நிலை நிதர்சனம் உணர்வேன் என் சொல் லும் செயலும் ஒன்றென உணர்த்துவேன் நாடு நலம்காக்க - எல்லை காப்பது போல் வெளி யேறாது நலம் காப்பேன் இது இயலாது போகாது முடியாது என ஆகாது ஏன் யெனில் என் உயிர் எனது நாடு என் நாடு எனதுயிர்... உள்ளிருப்போர் உடன்படுவோர் அனைவருக்கும் வாழ்த்துகள்! பெருமை யுடன்