ஈசனின் காதலியே!
ஈசனின் காதலியே!
எனை நேசமுடன்
ஆதரி நீயே!
உலகை இயக்குபவனை
இயங்க வைப்பவளே!
செருக்கில்லா
வனிதா மணியே
பொறுமை கடலே
பொறுத்தாலும் சுடரே!
அவனது(ஈசன்)
ஆசைக் குரியவளே
இவனது
பூசை க்குரியவளே...
பற்றில்லா பந்தமதை
பற்றுடன் பந்தாக்குங்கள்
தொற்றில்லா சொத்தாய்
சொந்த மாக்குங்கள்!
புதிய நோய் தொற்றால்
அவதியுறும்
என் கிராமத்து மக்களை
என் இன மக்களை
என் நாட்டு மக்களை
இவ்வுலக மக்களை
நோய் பரவாது
உயிர் குறையாது
உலகை காக்க வேண்டும்
தாயே! சக்தியே
என் ஈசனின்
காதலியே!
வாசனின் சகியே
சாதலூக்கு அஞ்சோம்
அதற்கென உணை
கெஞ்சோம்...,
வீரத்தில் மாய்வோம்
ப்ரிய சோகத்தில்
மாய்வோம்!
சோதனையிலும்
வேதனையிலும்
ருசிக்க அல்லாது
புசிக்கவே உணவின்றி
உயிர் விட...
உயிரை விட
மாய்த்திட ஆகாது!
அகவை ஏறி
முதுமை கூறி
உன் மலரடி தொட
மரணத்தை நாட ஆவா!
பார்த்திராத நோவாய்
பாரதத்தை மட்டுமல்ல
பார் முழவதும் பரவி
உன் பாரா முகத்தால்
உயர் மாய்வதென்ன
பிணங்கள் கூடுவதென்ன
உனை கூப்பிடாத போதும்
கரம் கூப்பி
குப்பிடாத போதும்...
கவலை யின்றி சிரிப்பவளே
கடமை யென காப்பவளே!
தொழுகைகள் நடவாது போதும்
ஜெபங்கள் கூடாத போதும்
பிராத்தனைக்கு வழியின்றி - உனை
நினையாத போதும்
நீங்காதே உன் நினைவு
எம்முள்!
நிரந்தர மாய் எம்மை காக்க
நிபந்தனைகள் ஏதும்
வைக்காதே
பரவாது குறையச் செய்
நோய் தொற்றை
முற்றிலும் குளிரச் செய்!
நோயல் மரணீக்காது போக...
தாயா(ய்) தரணி காக்க
வாராய்!
சக்தி கொடு
பாரதம் மீண்டெழ
பரவல் பாராது
மாளாது எழ...
கண்கள் சிவந்து கொள்
கரங்களால் சினந்து
கொல்லாதே!
சினம் தனியட்டும்
சிவ மறியட்டும்
போதும் பலி
வழி சொல்
வகை சொல்
விலகிட...
தற்காப்பு தனியாகத்தான்
பதுங்கலே பராக்கிரம
இவ் வுத்தியே
உத்தம மெனில்
இதற்கு
விடிவு எப்போ
அதன் முடிவு எப்போ?!
விளையாட்டாய் கூட
விபரீதம் ஆக்காதே
பொறுமை யின்றி
எம்மை தாக்காதே!
ஒரு முகம்
இரு விழி
முக்குணம்
நாக்கரம்
கொண்ட வளாய்
ஐம் பூதம் ஆள்பவளாய்
பார்க்கிறேன் - என்
ஈசனின் காதலியே
வாசனின் சகி யே
எம் தேசந்தனை
காத்திட...
நேசமுடன்
ஆதரிப்பாய் நீயே!
மனச் சக்தியாய்...
மனித சக்தியாய்!
Comments
Post a Comment