சித்திரை முதல் நாள் - திருநாள்!

கொஞ்சம் நில்லடா
பதில் சொல்லடா...
தமிழா!
மொழி மறந்தோம்
முக மிழந்தோம்
முறை மறந்தோம்
நி(ரம்)றை மறைத்தோம்!
வழிபாடு தளத்திலும்
வாழ்வியல் கலத்திலும்
இன்னும் பிற...
நாகரீக மென
 தமது இனம்
நாலும் மறந்தோம்!
ஆரிய முறைகளையும்
வந்தேரி (கூட்டத்தையும்)
கூற்றையும்
அந்நிய மாய் என்னாது
அன்மையா நெருங்கி
அருமை அறியாது
தமிழரின் தொன்மை
மறந்தோம்!
மார்தட்டிய மறவர்
கூட்டமொன்று
மறந்தே விட்டதா?!
நமது வழி
மொழி, முறை
கலாச்சார ம்
அத்தனை யும்...
இனியும் தூங்காதே
பிற மொழி
தங்காதே
இனி நீயும்!
துயிலாதே
விழித்தெழு
நம்மில் மறைக்கப்பட்ட தை
மாற்றப் பட்டதை
மாற்றமெனச் சொல்லி
மாறியதில்
மகிழாதே!
இனிப்புக்கு
பனை வெல்லம்
மறந்து
வெள்ளை (சீனி) சர்க்கரை
மாறியது போல்
எத்தனையோ விடயங்கள்
நம்முள்...நமக்குள்!
உதாரணமாக
தமிழர் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு
தைத் திங்கள்
முதல் நாள்!
முறை மாற்றாதே
முகம் மாறாதே
சுயம் மறக்காதே!

கேட்டறிவோம்
படித்தறிவோம்
தமிழர் த(ந)ம்
பழம் பெருமைகளையும்
கலாச்சார பண்புகளையும்
நினைவு கூறுவோம்!
மாறாதே - பழமை
மறவாதே
தமிழரென்று ஒரு
இனமுண்டு
தரணியிலே அதற்கு
தனி இடமுண்டு!
இன்று-
சித்திரைத் திங்கள்
முதல் நாள்!
வாழ்க தமிழ்
வளர்க தமிழினம்!!
வணக்கத்துடன்.


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1