பலே!
பலே வெள்ளை யத் தேவா!
பலே!
சமுதாய விலகலில்
உமது சமுதாய
அக்கறையை
நேற்று தொலைக்காட்சியில்
கண்டேன்...
என்ன ஒரு வீரம்
என்ன ஒரு விவேகம்
கீழ மாரட் வீதியிலும்
மற்ற பிற இடங்களிலும்
அத்தனை ஒரு கூட்டம்!
விடுமுறை என்ற
எண்ணம் போல...
மனம் காட்டமாக உள்ளது!
நோய் தொற்று
பிறரருக்கது நமக்கில்லை
என்ற நினைப்போ
என்னவோ...
என்ன ஒரு வேகம்
வாங்குவதில்
என்ன ஒரு மோகம்
உரசிக் கொண்டு
உலாவுவதில்...
வேதனை வெட்கம்
என்னுள்! - இது
வெகுளித் தனச் செயலா
அல்லது
ஆகட்டும் பார்ப்போமென
ஆணவச் செயலா!
இரண்டும் அர்த்தமற்ற து
இதில் வெளி மாநிலத்தவரை
கூறை கூறல்...
நாளையே மரித்துவிட்டால்
பொறியல் சாப்பிடுவது
எப்படி?!
நாளை மறுநாள்
உலகம் அழிந்து விட்டால்...
இந்த காய் கறி(னி) களை
எப்படி உட்கொள்வது!?
உங்கள் முயற்சி
சாப்பாடு மோகத்திலா
அல்லது
இன்றைய நிலையை
மோசமாக்
குவதிலா...
உங்களது நன்நடத்தை
எனக்கு புரியவில்லை
நண்பர்களே!
உங்களை கவனியுங்கள்
உங்களைச் சுற்றி
கவனியுங்கள்...
நோய் தொற்றை
பரவாது தடுக்க
ஒரு கூட்டம்
பரவிய நோயை
குணப்படுத்த ஒரு கூட்டம்
பரவுமோ என அஞ்சி
தனிமை படுத்தி
பாதுகாக்க ஒரு கூட்டம்
இப்படி-
ஒருவகை யில்
முனைப்பாய் முயற்சிக்க...
நீயோ!
பொறுப்பு இல்லாது
பொழுது போக்க
வெளி வருவது...
மனம் வேதனை அளிக்கிறது!
அரசும்
மருத்துவ, சுகாதார
காவல் துறை களும்
நமக்கு சேவை செய்யத்தான்!
அப்படி உன்னை(நம்மை)
காக்க
நீ(நாம்) என்ன
அவதார புருசர்களா!?
கொஞ்சம் எண்ணிப்
பாருங்கள்
அவர்களுது
வேலையை(சேவையை)
மதித்தாவாது
நினைத்தாவது
நன்றி கடனாய்...
மாற்றிக்கொள்
உன்னை, உன்
மனநிலையை!
உன் ஆரோக்கியத்திற்கான
அலோசனை தானை இது
அலட்சியம் வேண்டாம்
நண்பா!
இன்றைய நிலையில்
இது அவசியங்கூட...
அமைதி கொள்
நிம்மதி பெற...
சமுதாய விலகலை
சடங்காகச் செய்
தனித்திரு விழித்திரு
அலட்சிய போக்கை
தவிர்த்திரு...
நீ இல்லத்தில்
இருப்பதே இனிமை
பயக்கும்
இல்லாவிடில்
இன்னல்கள்(நோய்)
பயணிக்கும்
கொஞ்சம் கஷ்டந்தான்
இது-
கொஞ்ச நாள் கஷ்டந்தான்!
தேவைக்கு மட்டும்
வெளியேறு
அது தேவையா யென
அதற்கு முன்
நீ உணரு...
நட்புடன்.
Comments
Post a Comment