புண்ணியவான்...!
இன்னமும் இருக்கத்தான்
செய்கிறார்கள்...
பூமிக்கு பாரமாய்
புண்ணிய மேதும் பாராது
புலனைந்தும்
செயலிழக்காது
மண்ணீல் மக்காது
மனங்கள் வேர்க்காது
மாணீடத்து மாக்களாய்...
தமிழக
தலைநகரத்து தவறுகளாய்
தறுதலைகளாய்
மனித இனத்து
துரோகி கள்
மனம் துவளாது
நெகிழாது
மரப்பிண்டங்களாய்
எதிலும் சேர்த்தில்லாது
இன்னும்
மரணீக்காது
நடை பிணங்களாய்
இருக்கத் தான்
செய்கிறார்கள்!
மனித மாண்பு
நெறி மறந்த...
மரணத்திற்கு பின்
மயானம் செல்லும்
வழியில்
மாளாது மாண்ட
பல உயிர் காத்த
தன்னுயிர் நீத்த
உயர்வாளர்
திருவாளர் மருத்துவர்
உன்னத மகத்துவர்
உடலை அடக்கம் செய்ய
விடாது - துரத்தி
துயரத்திலும் துணிந்து
இடையூறு செய்த
அந்த- இழி பிறவிகளை
எண்ணாது தள்ளவே
நினைத்தேன்!
நீங்கா இந்நிகழ்வு
என்றும் மறையா
மறவா
இப்பதிவு!
நோய் தொற்று
காலத்தில்
பல உயிர் காத்த
உத்தமனுக்கே
இந்நிலை!
உடலடக்கம் செய்ய
விடாது இடைமறித்த
அந்த ஈன இழி
பிறவிகளை...
உன்னத உலகில்
உயிர் வாழ- தகுதியற்ற
உயிரினங்கள்.
இனி-
அரசு அதிகாரம்
அங்கீகாரம் சலுகை கள்
ஏதும் பெறாது
தனித்து இயங்கட்டும்
ஒதுக்கி வைப்போம்
வாழ தகுதியற்ற
ஓரினமாய்
ஓங்கி அறைந்து
ஒதுங்கி கொள்வோம்
மனதால்!
மரணீத்த அந்த
மருத்துவருக்கு
மகத்துவருக்கு
வருந்திக் கொள்வோம்
உணர்த்திச் சொல்வோம்
இதை காணாது
போ-நீயே!
புண்ணியவான்!
இப்படியும்
இருக்கத்தான்
செய்கிறார்கள்...
இன்னமும்!
Comments
Post a Comment