ஆவணி சதுர்த்தி யில்!
பார்வதி மைந்தா சிவகுமரா! மூத்தோனே முதற் கடவுளே! ஆற்றங் கரையிலும் அரச மரத்தடியிலும் குளக்கரையிலும் அரசு வேம்பு யடிலும் முச்சந்தியிலும் முக்கிய யிடம் பெற்றவனே! எல்லா இடங்களிலும் முன்நிறுத்தி மூக்கு வுடை படுபவரும் நீயே! என் போல - நீயும் அடியேன் போல் ஆண்டவனும் நீ! அவ்வப்போது அவதி படுவதுண்டு! அன்றைய பெரியார் முதல் இன்றைய சிரியோர் வரை உன்னிடத்து மோதல் தொடர்கிறதே - தொடர் கதையாய்... தெய்வங்கள் பலவுண்டு அதில்- உனக்கென்று தனி குணமுண்டு! அடைத்(ந்)த ஆற்றை திறந்து விடுவாய் ஆழ்கடல் நீரில் கரைந்தும் விடுவாய்! வீண் யென நீ! விலகிப் போனாலும் விடுவதாய் இல்லை உன்னை! ஆவணி சதுர்த்தி யில் ஆடம்பர பண்டிகை உனக்கு என்றும் - கேள் விநாயக ரே! இன்று- கேள்வின் நாயகரே உமக்கு விழா இல்லை! எதிர்த்து பேச எவர்க்கும் விலா இல்லை! கொரானா தான் காரணமா அல்லது கொடுர மனந்தான் காரணமா?! நான் அறியேன் இதை- உன்னை யன்றி யார் அறிவார் பிள்ளையாரே! இதில் மகிழ்ச்சி மங்காது மாறாய் பலரது இல்லத்தில் பொங்கும்! உரிமையை விட உயரியது எது! கடமையை விட கஷ்டம் ஒன்றும் பெரிதில்லைவே... இல்லத்தில் கொண்டாடலாம் என்றவுடன்- ஒரு சிறு சந்தேகம் ஒரு நின...