ஆவணி சதுர்த்தி யில்!
பார்வதி மைந்தா
சிவகுமரா!
மூத்தோனே
முதற் கடவுளே!
ஆற்றங் கரையிலும்
அரச மரத்தடியிலும்
குளக்கரையிலும்
அரசு வேம்பு யடிலும்
முச்சந்தியிலும்
முக்கிய யிடம் பெற்றவனே!
எல்லா இடங்களிலும்
முன்நிறுத்தி
மூக்கு வுடை படுபவரும்
நீயே!
என் போல - நீயும்
அடியேன் போல்
ஆண்டவனும் நீ!
அவ்வப்போது அவதி
படுவதுண்டு!
அன்றைய பெரியார் முதல்
இன்றைய சிரியோர் வரை
உன்னிடத்து மோதல்
தொடர்கிறதே -
தொடர் கதையாய்...
தெய்வங்கள் பலவுண்டு
அதில்-
உனக்கென்று தனி
குணமுண்டு!
அடைத்(ந்)த ஆற்றை
திறந்து விடுவாய்
ஆழ்கடல் நீரில்
கரைந்தும் விடுவாய்!
வீண் யென நீ!
விலகிப் போனாலும்
விடுவதாய் இல்லை உன்னை!
ஆவணி சதுர்த்தி யில்
ஆடம்பர பண்டிகை
உனக்கு என்றும் -
கேள் விநாயக ரே!
இன்று-
கேள்வின் நாயகரே
உமக்கு
விழா இல்லை!
எதிர்த்து பேச எவர்க்கும்
விலா இல்லை!
கொரானா தான் காரணமா
அல்லது
கொடுர மனந்தான் காரணமா?!
நான் அறியேன்
இதை-
உன்னை யன்றி யார்
அறிவார் பிள்ளையாரே!
இதில்
மகிழ்ச்சி மங்காது
மாறாய் பலரது
இல்லத்தில் பொங்கும்!
உரிமையை விட
உயரியது எது!
கடமையை விட
கஷ்டம் ஒன்றும்
பெரிதில்லைவே...
இல்லத்தில் கொண்டாடலாம் என்றவுடன்- ஒரு சிறு
சந்தேகம்
ஒரு நினைப்பு,
ஒரு தவிப்பு
களி மண்யெடுத்து
கை வண்ணக் கலையில்
உனை வடிவமைத்து
கடைத் தெருவில்
உன்னை காசாக்கி
கை மாறியதும்
கடவுளாகி எப்படி
கடவுளாக்கி
பூ போட்டு பூசை செய்து
பலகாரம் பலவிதம்
அவல் பொறி ஒரு ரகம்
படையலிட்டு பத்தி காட்டி
ஓ கோ வென உசத்தி
உயரத் தூக்கி
போட்டுடைத்து
நீரில் கரைத்து உன்னை
மண்யாக்குவதில்...
அப்படி என்ன
பிராத்தனை
வேண்டுதல் வருடந்தோறும்!
கணேசா
என்னையும. கவனி
உன்னைப் போல்!
இது
அருள் மதிப்பா
அவமதிப்பா!
தெரியவில்லை
ஆண்டவரே
அடையாளம் காட்டுங்கள்
அடைக்கலம் தாருங்கள்!
என்னையும் கொண்டாடி
போட்டுடைப்பர் அவ்வப்போது
ஆனால்-
உம்மை ஆண்டு தோறும்!
எல்லா குடும்பத்திலும்
நடப்பது தானே! இது
கண நாதனே
சிரித்தாயா என்னை ச்
சிந்திக்க செய்தாயா!?
மதம் சொல்லுவதால்
மறுக்க முடியவில்லை
வேறு விதமாய் எண்ணி
விலகி விடவும் முடியவில்லை
விட்டுவிடவும் மனமில்லை!
அடியேனின்
அவதிக் கெல்லாம்
ஆண்டவனே(ரே) நீயே கதி!
உம்மால் இந்நாடு
வளம்பெறட்டும்
நலம்பெறட்டும்
நாமு(னு)ம் கூட...
Comments
Post a Comment