சுதந்திரம் தினம்- போற்றுவோம்!

சுதந்திர தினம் போற்றுவோம்!
சுதந்திர தின மெங்கும்
போற்றுவோம்!
எப்படி கிடைத்ததென 
தெரிந்து - சுதந்திர ம்
போற்றுவோம்!
எதற்காக கிடைக்கப்
போராடினோம்...
அறிந்து போற்றுவோம்!

வீரமாய் வித்திட்டு
போராடிய வீரர் கள்
நினைத்து
சுதந்திர தினம்
 போற்றுவோம்!
போராட்டத்தில் உயிர் நீத்த
உத்தம தியாக 
செம்மல்களை நினைந்து
சுதந்திர தினம் 
போற்றுவோம்!
அன்று நாடு பிரிய
அந்த நல்லவர்களும்
நம்முடனே என நினைந்து
நினைத்து 
சுதந்திர தினம்
 போற்றுவோம்!
வீனர்களிடம் சிக்கி
வியாபாரமாகி போன(து)
சுதந்திரம் - தினம்
எண்ணிப் போற்றுவோம்!
கொள்ளை, கொலை
கொள்கை மாற்று(ம்)
வியாபாரங்கள்...
கயவர்கள், கள்வர்கள்
தாய்நாடு மறந்த
இனத் துரோகிகளுக்கும்
இடங் கொடுத்த
சுதந்திர ம்
செஞ்சு வலிக்கப்
 போற்றுவோம்!
பத்திரிகை தர்மமென
ஆட்சிக்கு தகுந்து
கட்சி சார்ந்து
மாயை மங்காது
பருகும் சுதந்திர ம்
பலம் நினைத்துப்
போற்றுவோம்!
கல்வியை காசாக்கி
காதலை சாதி மோதலாக்கி
முயங்கும் ஓர் தனிக்கூட்டம்
இவர்களுக்கான சுதந்திரம்
வருந்திப் போற்றுவோம்!

இன்னும் பிற
இன்னல்கள் பல
எழுத்தில் சொல்லா
 வண்ணம் - எண்ணம்
தாங்கா எத்தனையோ
கொடுமைகள் கண்டும்
காணா
இதற்கு தானா சுதந்திரம்
மனம் பொங்க 
போற்றுவோம்! போற்றுவோம்!
ஆண்டுக் கொரு முறை
ஆண்டறிக்கை போல்
நலத்திட்டங்களும்
வளர்ச்சி விகிதங்களும்
வீரவசனமாய்
தியாகிகளை வலிந்து நினைந்து
நாடகப் பேச்சாய் போன
ஒப்பற்ற
சுதந்திர தினம் 
போற்றுவோம்!
நல்லவர்கள் சிலர்
நாட்டில் இருப்பது ம்
நடப்பவை சில
நல்லதாய் நடக்கவும்
பெற்ற சுதந்திர ம்
தினம் மேனியாய்
பேணிகாக்க
 போற்றுவோம்! போற்றுவோம்!
சிந்திய இரத்தமும்
சிதறிய வேர்வைத்
 துளிகளையும்
மறவாதே! (ஏ)மாறாதே
உண்மையும் நேர்மையும்
உடல் குருதியில் சேர
உறுதியாய் ஒற்றுமையில்
மொழி வளர இனம் வளர
இந்நாடு வளர 
நலமலர
சுதந்திர தினத்தைப்
 போற்றுவோம்!
தினம் - சுதந்திரமாய்...
போற்றும் வரை
போற்றுவோம்!
வாழ்க வாழ்க!!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1