அன்பு ரசிகனாய்...!

கர கர குரலும்
குறு நகை குறும்பும்
சொல்லாடும்- உம்
சொல்லி லாடும்
தமிழும்
இனிதன கேட்க
பெருங் கலைஞ(ன்)ர்
நீ!
அழுகு தமிழே நீ!
உரைநடை எழுத்திலும்
கவி, கட்டுரை யிலும்
உம் தமிழ் கண்டோம்
பிழை யில்லா - அழகு
நடை உண்டோம்
அமுதென!
தங்கு தடையின்றி
ததும்பும் குறையின்றி
கருத்தொன்றி
திரை வசனமும்
மேடைப் பேச்சும்
அருவி யென தருவீர்ரே
தந்தீரே
தமிழை பிரிவீர்ரோ
நினையவில்லை!
ஒலிப் பேழையில்- உம்
தமிழ் (குரல்)
கேட்கும் போது
உம்மை நினையாது
நா(ள்)ன் இல்லை
ஓய்வெடுக்கும் சூரிய னாய்
உறங்கு - நீர்!
இல்லாத
இப்பொழுதும்
உன்னைப் பற்றியே
ஏச்சுகளும் பேச்சுக்களுமாய்
தமிழகம்!
உம்மை நினைத்திருக்கும்
அதுவரை
உம் புகழ் நிலைத்திருக்கும்!
உம் அருந்தமிழுக்கு
அன்பு ரசிகனாய்
நான்!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1