ராச மலை-ராட்சிச மலை ஆனது ஏன்?!

முன் ஜென்ம விரோதமா
மூதாதையர் சாபமோ
இயற்கையின் கோபமோ
இறையின் பாரா முகமா...
யார் யறிவர்!
இனி அறிந்து 
விடை எதற்கு
விதி செயல்
வினா எமற்கு?!
விட்டுவிட மனமில்லை
விஞ்ஞானம் இவ்வளவு
வளர்ந்தும்
இதுப் போல் நிகழ்வுக்கு
முன்னெச்சரிக்கை இல்லை
முன் தடுப் பில்லை
மண் தடுப்பு விழகி
மழையும் ஒழுகி
வான் பிளந்து மழையும்
மண் பிளந்து குழியும்
ஒன்று சேர
நிகழ்ந்த்தோ...
மூணாறு நிலச்சரிவு!
வேதனையின் உச்சம்
கூடி குலாவி குடியிருந்து
காதலாய் ஓடியாடி
கூட்டமாய் வாழ்ந்த
 ஓர் இனம்
மண்ணில் மறைந்து
கானாதே போனதே
மரணம் ஒரு போதும்
மகிழ்வில்லை தான்
சாவு அனைவருக்கு முண்டு
ஆனா-
ஏன், எதற்கு எப்படி யென
தானும் அறியாது
பிறரு மறியாது
மாண்டுப் போவது
மண்ணோடு மூழ்கிப்
போவது
மறக்காது!
இக் கொடுமை
இயற்கையின் கோரம்
கோபம்
இப்படியும் பழி கேட்குமா!?
சிறார் பெரியோர்
இளம் வயதினர்
பிஞ்சு குழந்தைகள்
இவர்களது மனம் பாராது
மண் மூடிய(சரிய) மாய
மென்னவோ?!
இப்படி நடக்குமென தெரிந்தா
அங்கு குடியிருந்தனர்
பல ஆண்டு களாய்...
பலரும் பல வருடம் பார்த்தும்
யாவரும் யாதுமறியாது
போனது எப்படியோ!
விஞ்ஞானம் விடைச்
சொல்லாது
முன்பிருந்த
மலைக் காடுகள் தான்
காரணமா
மண் சரிய...
மனம் செரிக்கவில்லை
மழை சகதியில்
மலை குவியலாய்
மண்ணோடு மனிதர்களும்
சதைக் குவியலாய்
அய்யோ
கண்டதன் வேதனை
காகித்த்தில் சொல்ல இயலாது
கனவில் நடந்த நிகழ்வாய்
இது மறந்து போகும்
ஒரு நாள்-
ஆழ்ந்த இரங்கலைச் சொல்லி
வருத்தங்களைச் சொல்லி
உச்ச மனவேதனையில்
யாருக்கு ஆறுதல் சொல்ல...!
மண்ணை நோவதா
மக்களை நோவதா
மழையை பழிப்பதா
அவர் தம் பிழையை பழிப்பதா
மலைச் சரிவில் குடியிருக்கும் மக்களே!
கவனத்தில் கொள்வீர்
இனி -
கவனத்துடன்( செல்வீர்)
இருங்கள்!
எங்கும்
மனித உயிர்கள்
மகத்துவமானதே
மகத்தும் 
ஆனது தானே!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1