வைராக்கியம்!

என்ன அற்புதம்
என்ன ஒரு அழுத்தம்,
அர்த்தம்
என்ன ஒரு ஆணவ எழுத்து
அருமை!
எண்ணத்தை எழுத்தாக்கி
வார்த்தைகளில்
வாழ்க்கையைச் சொன்ன
எனதருமை
பாலகுமாரா!
பெரும்பாலும் நினையாது
கடவாது
என் எண்ணம்! - உன்னை
சமீபத்தில் படித்தது
படித்து பிடித்தது
வைராக்கியம்-
தெளிவான பிடிவாதம்
கோபமற்ற உறுதி...!
ஆகா!
என்ன ஒரு விளக்கம்
எல்லோரிடத்திலு முண்டு
எல்லோருக்கு முண்டு!
எப்படி- பிடிவாதமாய்
பிடி-என் வாதமாய்
சொன்னீரோ...
குழப்பமற்று 
யோசிப்பில் சோர்ந்து
சுருங்கி விடாது
சுயம் கெடாது
மாற்று யோசிப்பின்றி
தெளிவாக, தெளிவான
பிடிவாத(மாய்)மாகவும்

சார்பற்ற நிலையில்
எங்கும், எதிலும்-சாராது
சார்ந்து நோகாது
சீர்தூக்கி
சிந்தை கலங்காது,
(மாறாது)
நினைத்து மாறாதும்
நினைவிழந்து மாறாமலும்
நிலையாய் நம்மை
நிலை நிறுத்தி
உறுதியுடன்...
அட, அடா
என்ன தெளிவு
எப்படி ஒரு வார்த்தை
உன்னதமான விளக்கம்
உண்மையுங் கூட...!
சத்தியமது உன்
வார்த்தை - உச்சத்தில்!
சாத்தியமா யது என்
வார்த்தை - அச்சத்தில்!
எண்ணப் போராட்டம்
என்னுள்...
ஆலோசிக்கிறேன்- மனதோடு
ஆராய்கிறேன்...
ஆராதிக்கிறேன் - உம்மை
ஆமோதிக்கிறேன்-
உம்மோடு
விடை தெரியா விடையங்கள் பல...
என்னுள்!
அதில்-
இதுவுமொன்று
அன்பரே!
வாசிக்கும் போதே
யாசிக்கிறேன் - மனதில்
நேசிக்கிறேன்
உம் தமிழை!
தோழா!
உன் எழுத்துக்கு 
நானடிமை
நன்றி உமக்கு
வணங்குகிறேன் உன்னை!
வாழ்க உமது புகழ்
என்றென்றும்...

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1