வாழ்க நீ!

மாதப்பூர் பெற்ற
மாணிக்கமே! - எங்க
மா தவமே!
அங்க அப்பன் - வித்தே
முத்த அம்மாள் பெற்ற
முத்தே!

ஆயிரம்!
 திங்கள் கண்டவரே
செவ்வாய் மொழியில்
புத்திர புதனுடன்
விருப்ப வியாழனாய்...
வென்ற எங்கள்
வெள்ளியே!

அன்பானவரே!
அனைத்தும் அரவணைக்கும் - அன்னையும் மானவரே!
உ தவை யில் தாயுள்ளமாய்
உண்மை யில் தயாளனாய்
தீங் கேதும், 
கள்ள கபட மும்
உன்னுள் இல்லாதே
உள்ளானாய் வெள்ளாலா!
பகை காணா வகை
செய்து - மிகை யானதே
உள்ளம்!
பார்வை ஞாயிறு வாய்
முதலி குல...
முதல் நீ யே!

பல்லடத்து பகலவனே!
பள்ளி அறியா பவழமே
படிக்காத மேதையே
நாலும்- நன்கறிந்த வரே
நன்றி மறவாத
மகத்துவரே!
என்னமிட்ட செய்கையில்
அன்னமிட்டுப் பார்த்தவரே!

சுற்றும் சூழ அறவனைத்து
சுகம் கண்டவரே!
சொந்தம் பழிக்காத
அகம் கொண்டவரே!
வாழ்வில்- இலட்சுமி யே
இணைத்து இலட்சியம்
கண்டவரே!
பிற குறை சொல்லாது
குறள் சொல்லி - குரல்
ஓங்கி  மணியாய்
தமிழ் ஒலித்து
குறள் வழி நடந்த
குபரே ரே!

தொழில் சொல்(லும்)ல
பாத்திரம்
அன்பு சொல்ல
மாத்திரம்...
முயன்றே பெரும்-
முதல் நீ!
முக்கால் கைச் சட்டையும்
நாலு முழ வேட்டியும்
நெற்றியில் நீரும்
வெற்றியில் பூத்த
முழு மதியாய்...
பூரண பிறப்பே -
 மங்கா உன் சிறப்பே!

சந்திர சரசுவதி
சகுந் தலைச்  செல்வம்
சேர்த்து தந்தவரே!
உயர்ந்த மனிதரே
உம்மை மறக்க லாகாது...
மாண்டவ றெல்லாம்
மறைவதில்லை!
உங்களை மறப்பது மில்லை...
வேடமில்லா வேடனைப்
போல் காத்த - பார்த்த
எங்கள்  வேங்கடமே
எங்க வெங்கடா சலமே!
நீர் வாழ்க!
வாழி நீ!

அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1