தேநீர் சொல்லும்... காலை!

உம்!
இந்தா பிடி
 குடி...
அன்பாய் ஆசையாய்
நல்லதாய்
துவக்கும் 
நன்நீர்!
அல்லது - 
பாலும், தேயிலை
சேர்ந்த வெறும்
தேநீர்!
டீ தான்-
கைமாறும் போது
சிரத்தையாய் ஒரு நாள்
சிரிப்பாய் மறுநாள்
சினமாய்
வேறொரு நாள்
சிரந் திருப்பி 
ஒருமுறை
குத்தலாய், 
குணட்டலாய்
குணமாய்...
இப்படி-
வித விதமாய்
செவி கேள
ஒளிரத் துவங்கும்
காலை!
அன்றைய பொழுதை
உணரத் துவங்கும்!
ஆமாம்-
இது ஒன்னு தான்
குறைச்சல்
அன்று, மனதில் ஏதோ
புகைச்சல்!
இது ஒரு கேடு
மனம் பாடும் பாட்டு!
எப்படி இருந்தது
எப்படி இருக்கு...
இப்படியும் ஒரு நாள்!
நாளை தூள் வாங்கனும்
ம்ம்ம்- சரி என்றால்
தோள் குலுக்கி
முகவாய் யிடித்து
பதிலாய் போகும்!
சலிப்பாய்,
சல்லட கண்ணில்
பார்த்து முறைத்தே
ஒரு நேரம்!
காலை நேரக்
குதுகுலமும்
சில வேளையில்
குளித்து வர
ஈரச் சேலையில்
துவங்கும்!
சேவைக்கும்,
 தேவைக்கும்
காலை நேர
தேநீரே தெரிவிக்கும்!
அதுவே முதலாய்
தீர்மானிக்கும்!
நிறைய தீர்மானங்கள்
தீர்க்கச் சொல்லும்
வார்த்தைகளாய்
மாதச் செலவு
வெளியூர் பயணம்
பிள்ளைகள் படிப்பு
உறவுகளின் பிடிப்பு
உரைக்கவும்
உரசலாகவும்
உம் மென்று
வார்த்தை கள் குறைத்தும்
விவாதமாய்...
வித விதமாய்
காலை பொழுது
கணக்கில் குறியீடு
எண்களாய்
எண்ணங்களாய்
துவங்கும்!
அவ் வொலி
கேளாத, கேட்காத
நாட்கள்
ஒளிராதே போகும்
சில நாள்!
இரவு முடிந்தும்
மடிந்தும்
விடிந்தும், விடியாதே
போகும்!
இல்லாள்-
இல்லத்தில் இல்லாத
வேளை!
இதுதான் இல்லற மோ!?
உடன் இருந்தும்
இல்லாது போகும்
இல்லாள் - அவள்
இல்லாத போது
கூ ரில்லாத 
அறமாய்
அர்த்தமற்று
மழுங்கி தான் போகிறது
இல்லறம்!
அது(வே) நல்லறம்!
எதற்கு வம்பு...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1