இது விபரீதம்... ஜாக்கிரதை!

இது விவாதத்திற்கு
அல்ல
என் வருத்தமதை
சொல்ல!
கடந்த நூற்றாண்டின்
கடைசி சித்தராய்
நாம் நினைத்த
மூத்தோர் ஒருத்தர்
இங்கே-
அவரை முறைப்போர்
இல்லை!
பெரியவர் என
பெயர் கொண்டு
பெரிதாய் வல மந்தார்
வயதை
வாய்ப்பாக்கி
வாய்த்த  போதெல்லாம்
வார்த்தைகளை
வசையாக்கி
நாவினில் இசையாக்கி
இன்னல்களுக்கு வழி
சொல்லாது
இன்னும் பல பேசி
இருட்டை வெளிச்சமாக்க
வெளிவந்தார்
பழமாய்- 
வலம் வந்தார்
பலமாய்!
நல்லதே என்றுதான்
நா(மு)ம் நினைத்தோம்
பின் சென்றோம்
அவரது எண்ணம்
வீணாவது போல்
கடைசியில்
உரித்தால் ஒன்றுமில்லா
சில வெங்காயங்களை
திராவிடம் தேசியம்
நாத்திகம்...
என வெள்ளித் தட்டில்
தமிழ்திரு நாட்டிற்கு
(மட்டும்)
தந்துவிட்டே சென்றார்
தரணி ஆள
 தகுதியில்லாதோர்
கைகளில்...
பாவம்
அவருக் கெப்படித்
தெரியும் - இது
உழைக்காது பிழைக்க
வழி யென்று!
முக்கு முனையிலும்
எதுகை மோனையிலும்
கவிதையாய் கதையாய்
 தவளையாய் 
தவழ விட்டு
வாயால் வயிறு
 வளர்த்தவர்கள்
அனேகம் என்பேன்!
கடந்தோடிய அக்
கஷ்டகாலம்
அதை 
கையில் எடுத்தவரும்
கத்தி கத்தி-
கத்திக் கொண்டு
அறுத்தவரும்
மக்கள் மத்தியில்
ஜனச் சட்டியில் போட...
கண்டவர் கண்ணுக்கும்
கிடைத்தவர் வாயிக்கும்
விழுந்து விருந்தாகின!
எவரும் அறிவர்
அது பெருங் கூட்டம்
பகுத்து அறிவதில்
அறிந்ததில்!
அவர்கள் 
உபதேச மெல்லாம்
உள்ளுருக்கு மட்டுந்தான்
வெளி நாட்டிற்கோ
வெளி மாநிலத்திற்கோ
அல்ல!
ஏன் அண்டை திராவிட
மாநிலங்களுக்கு கூட
இல்லை!
அப்படி இல்லவே இல்லை
(அவர்கள் ஒரு போதும்
செவி மடித்து கேட்ப்பதில்லை)
சாடுவதும்
இகழ் பாடுவதும்
ஒரு மதத்தை தான்
ஒரே மதந்தான்!
அப்படி ஒரு பற்று
காய்த்த மரத்தில் தானே
கல் விழும்...
வேற்று மதம் சாடாது
வேறு எங்கும் போகாது
வெறுங்கை முலம் போட்டு
வீராவசனம் பேசி
ஆளுந் தரப்பில் கொஞ்சம்
அடங்கிய தரப்பில் கொஞ்சம்!
மிச்சமாய் இப்போ
ஒன்று துளிர்கிறது
துளிர் விடுகின்றது
நல் எண்ணமில்லாது
இம் மண்ணை விடாது
பாலாய்ப் போன - அந்த
கரு வெங்காயத்தை
பழகிப் போனதாய்
வதக்கி வதக்கி - பார்க்கிறது
கருப்பாய்
ஒரு கூட்டம்!
அதைப் பார்க்க
வெறுப்பாய் இருக்குது
நம் மன நாட்டம்.
இவர் போன்றவருக்கு
விளக்கம் சொல்வதை விட
விலகிப் போவதை மேல்!
நாட்டுப்புற பாடல்களில்
கேட்டு இருப்பீர்கள்
உஷார் அய்யா உஷாரு
ஜாக்கிறதை ஜாக்கிரதை
ஊர் சனம் ஜாக்கிறதை...
என-
ஏதோ தமிழகம் 
நலன் கருதி
நினைவு க்கு வந்த்து
நண்பர்களே!
உங்கள் நினைப்புக்கும்
கொஞ்சம் சொல்லி வைத்தேன்
அவ்ளோதான்!
அக் கிருமிகள் ஒட்டாது
அந்நோய் தொற்றாது
தடுக்க
சமுக இடை வெளிவிட்டு
சுமுகமாக சுத்தமாக
எதற்கும் இடம் கொடுக்காது
அவர்களை விட்டு
விலகி இருங்கள்
நண்பர்களே!
விரக் தீயில் அவர்கள்
விபரீதம் வேண்டாம்
நகருவோம்...


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1