இன்னொரு குடியிருப்பு!
பகுதி நேரக்
குடியிருப்பு வாசியாய்
நான்! -
குடைக் கூலி இல்லாது
அந்த
பகிரி-புலனத்திலும்
முக நூலிலும்
சரித்திர நாவலிலும்
கரைந்து போக
காலங்கள் கடந்து போயின!
பின்- காத்து நிக்குமா?!
கொரானா காலக்
கொடுரத்தில்...
ஓய்வுக்கு ஒதுங்கிய
நாட்களில்
முனைந் திருந்தேன்
என்பதை விட
அகலாது நனைந்திருந்தேன்!
பொழுது போக
ஆரம்பித்த இவ்விடயம்
இப்போது பொழுதே
அதில் தான்
கழிகிறது!
கைப் பேசி
கையை விட்டு
அகல்வ தில்லை!
திட்டுக்கள் பல வாங்கி
வசவுகள் வலுச்
சேரும் போதும்...
திடப்படுத்திக் கொண்டு
சில வேலைகள் செய்த
போதும்
திகட்டாதே செலவாகிறது
மிகுதி நேரம்!
அவ்வப்போது
தொலைக்காட்சி யிலும்
கொஞ்சம்!
கொலைக் குற்றமா - இது
குரல் உயர்த்தி
ஒரு வேகத்தில்
கேட்டாலும்
ஒரு வகையில் - இது
நேரக் கொலைதான்!
எனக்கும் இது நேர
என்ன செய்வது
எப்படி தவிர்ப்பது
தவிக்கிறது...
பாரா முகமாய்
பல நேரம் இருந்த பொழுதும்
பாவ மாய்தான்
இருக்கிறது
என்னைப் பார்க்கும் போது!
பின், ஒரு சமயம்
தொடாது தூக்கி
எறிந்தேன்! - அதை
பதினைந்து தினங்கள்
ஆ! கா - அது
வத்து...
என் கண்கள் பாதிப்பில்
படிக்க முடியாமல்
போன போது!
என்ன செய்வது?
சிரமந் தான்-
முடியாது போனத் தான்
எதையும் விட
முடியுமா?!
ச்சீ-
இந்த பழம்
புளிக்கு மென...
Comments
Post a Comment