சித்திரை முதல் நாள்!

இனிய சித்திரை திங்கள்!
முதல் நாள்
திருநாள் - நன்நாள்
வாழ்த்துகள்!
பிலவ-
பலவை சொல்லியும்
செய்தும்
கடந்து போனது!
கற்ற தென்ன...?
காரிய மாற்றும் 
முறையில்
கவனி யாதே
 போனோம்!

உலக அரசியலில்
உக்ரைன்- ரசியா
யுத்தம்!
உள்ளூர் அரசியலில்
வீழ்ச்சி யும், தாழ்ச்சி யும்
வளர்ச்சி யும்
ஏது மரியா - மந்தம்
இறுக்கமாக...
வேறு வழியின்றி
இணக்கமாக 
தொடர் கிறோம்!
அண்டை நாட்டு
பொருளாதார வீழ்ச்சி
ஆட்சி மாற்றம்...
அறியவும் ஆவலுற்றே
அண்டை வீட்டார்
நலங் கூட
அறியாதே போனோம்!
மானுடம் மரித்து
மனித நேயம் - கொஞ்சம்
மிஞ்சியதை
தொலைக்காட்சி யில்
கண்டோம்!
எங்கோ தொலைவில்
சாட்சியாய் கொண்டோம்!
நாளும் குறைச் சொல்லி
தேசப் பற்றும்
தேகப் பற்றும் மில்லாது
போனோம்!
பிறர் அறிய நில்லாது
போனோம்!

பெருந் தொற்று நோய்
குறைந்த போதும்
அதன் பாதிப்புகள்
பலவும் நம்முடன்...
நம்பிக்கை மட்டும்
நாளை வளர்க்க
நாமும் சேர்வோம் அதில்!
போனது போக
இனிதாய் பிறக்கும்
சுபகிருத ஆண்டையும்
ஆள...
வாழ்த்தி வரவேற்ப்போம்!
தேச நலமும்
தேக நலமும் - கூட
சுபமும், சுயமும் ஓங்க...
உழைப்பும் ஒழுக்கமும்
உயர்வைத் தரும்!
பொய்காது மழை
வற்றாத காவிரி - வைகை
உள்ளூர் உற்பத்தி...
காணாது பிறர் குற்றம்
வீணாகா இளைய சமூகம்
நிறை தரும் வாழ்வை
இறை தர வேண்டு வோம்!
நோயின்றி வாழ
சோர்வின்றி உழைப்போம்!
நட்பும் நகையும்
உறவும் உண்மையும்
பலனும், பயனும்
பயமின்றி காணவும்
உயர் புகழ்
நிறைச் செல்வம்
நீங்கா மனிதம்
நிலைத்து 
நிறை காண
போற்று ஓம்!
வாழ்க வளர்க
என்றும்-
வாழ்த்துகள் பல...

என்றென்றும்
அன்புடன்.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1