பரவசம் ஆக்கும்... பார்க்க!

அன்பருக்கு
நண்பரே!
எதை விரும்புகிறது - மனம்
ஏன் விரும்புகிறது...?
மீளாத ஆசை
முடியாத, அடையாத
அடங்காத, நிகழாத பல...
ஆசையாய் ஆர்வமாய்
விரும்புகிறது
விரும்ப படுகிறது!
வேடிக்கை அல்ல
விதையாகவே விளைகிறது!
உதாரணமாக-
திரையில்
சண்டை காட்சி
விரும்பிப் பார்ப்போம்!
காரணம்-
அது போல்
நம்மால் முடியாது
இயலாது!
உயரே பறந்தோ
உக்ரமாக வோ
பல பேரை தாக்கி
ஆவ தில்லை
நம்மால் ( நம்ம ஆள்)
ஆக! 
அதைக் காண
விரும்புகிறது மனம்!
பார்க்கையில் பரவசம்
மகிழ்வைத் தருகிறது!
அது போல்-
ஆபாச படங்கள்!
ஆ! - பாச படங்கள்...
சலியாது பார்க்கிறோம்
பார்க்கும் போதெல்லாம்
பகிர்கிறோம் - மகிழ்வை!
ஏன்
வித விதமான  செயல்கள்
நீண்ட நேர
செய்கை கள்...
நம்மா(ளு)ல்
ஆவ தில்லை
நடவாது ஒன்று
நடப்பதாய் காணும்
போது...
நம் மனம் விரும்புகிறது
விரும்பி பார்க்கிறது!
மூளை செயல் இழக்கும்போது
சிந்தனைச் செல்கள்
உறங்கும் போதும்...
உணர்வுகள் மேலோங்கி
உண்மைகள் மறக்க(மறந்து)
உற்சாக மடைகிறோம்!
அதைப் பெறவே
ஊக்க மளிக்கிறோம்!

இது போல்
நிறைய சொல்ல லாம்...
கப்பல் பயணம்
கடல் அலை
சந்திர பிம்பம்
சர்கஸ் பார்
தடைகள போட்டி
கால்பந்தாட்டம்
கிரிக்கெட் போட்டி
பனி சரக்கு...
அழகிய தமிழ் நடை
ஒதுங்கிய உடை
பிதுங்கிய சதை
திரைக் காதல்
தினக் காமம்...
முடியாத போது
பார்த்து ரசிக்கிறது
ரசிக்க சிரிக்கிறது
மனம்!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1