ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
வரும் நாட்களில்...
சில பழக்க-வழக்கம்
வாழும் முறையில்
புழுக்கம்
ஏற்பாடா திருக்க
பயன்ப் பட்டு -
பயணப் படுவோம்!
நல்ல உறவும்- நட்பும்
நம்மை விட்டு அகலாது
நன்றி பாராட்டு வோம்!
நகர்வதும், நகர்த்தலும்
நன்றாக நகரவே
நாம் நாமாக இருப்போம்
நமக்கு நல்லவர்களாக
இருப்போம்!
நேற்றைய
அனுபவம்
சுயமாய் இல்லாது
சுகமாய் வாழ
பயமாய் இல்லாது
பயனாய் பண்பட்டு வாழ
நாளை
வரவேற்போம்
புத்தாண்டை!
பலங் கொண்டு
சாதிக்காமல்
பக்குவங் கண்டு
சாதிப் போம்!
நம்மில்-
விலகலையும்
விரக்தியும் விட்டு
வீரமாய் விவேகமாய்
வாழப் பழகுவோம் !
படித்ததை பகிர்வோம்
பிடித்ததை செய்வோம்!
பிடிக்காத தை மறப்போம்
பிடிவாதத்தை குறைப்போம்!
அழகு என்பது
தனி யில்லை
அளவோடும்
அன்போடும்
காணுவதும் அனுகுவதும்
பிரிவு இல்லாது
உறவில்- பரிவு
சொல்லுவது அழகு!
எதிலும் காதல்
காலமாற்றம்- எளிதில்
கடக்கச் செய்யும்!
ஆவேசம் இல்லாத
ஆச்சரியம்
ஆகாயம்! வசப்படும்
ஆனந்தமாய் சுகப்படும்!
எண்ணப்படியே
எல்லை - அது
எண்ணுவதற் கில்லை!
எளிமை வலிமை கொடுக்கும்!
பசிக்கு கொடுப்போம்
பசித்து எடுப்போம்!
உணவை-
நோய் யற்ற வாழ்வு
குறை வற்ற செல்வம்!
மருந் தில்லா வாழ்க்கை
மகத்துவ மானது!
உண்மை யும்
உழைப்பு ம்
உணர்வாகட்டும்!
தேவை குறை ப்போம்
தேகம் காப்போம்!
செலவு சுருக்கி
செல்வம் சேர்போம்!
வீண் சாயம் பூசாது
விவசாயம் காப்போம்!
அரசியல் ஆதங்கம்-
போக்க
அறம் சார்ந்து நிற்போம்!
காலநிலை
மிக கவனம் - இனி
காப்பீடு கேட்கும்!
நிலை யற்ற வாழ்வு
எது?- நிலைத்து நிற்கும்!
புகழோடு உயர்வோம்
உயர்வை புகழ்வோம்!
சிறந்து வாழ
சிரித்து வாழ்வோம்!
சினங் குறைத்தால்
சிரமம் குறை உம்!
நன்மை காண
பிறரிடம்- நம்மை
காணுவோம்!
அளவோடு ஆசை
ஆஸ்தி பெருக்கும்!
அவசரம் அவஸ்தை
கொடுக்கும்
ஆயுள் கெடுக்கும்!
ஞானம் பிறர் சொல்ல
வாராது
யோகம் பிறர்
தடுக்க நில்லாது!
வீனாய் கசந்து
போகாது
வீணையாய் இசைந்து
போவோம்! - வாழ்வில்
நிகழ்வதும் நிகழ்ந்ததும்
நன்மைக் கென -
நினைத்தால்
நன்மை காண லாம்
இனிமை கொள்ளலாம்!
எதிலும்
நிறை காண்போம்
இறை காண!
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்.
Comments
Post a Comment