தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!
அன்புடையீர்!
நம் வாரிசுகள்
துணிவு மிக்க
ஆற்றலும், அன்பும்
அனேக சுகமும்
மூத்தோர் முன்னோர்கள்
நினைந்து மதித்து
புது பாதையில் பயணிக்க...
பண்டிகை கொண்டாட்டம்
பண்பாடு கொண்ட
ஆட்டம் வேண்டும்!
நேசமும் பாசமும்
மட்டுமன்றி
பொறுப்பாய் பொருமையாய்
நிதானமும்- நிதர்சனமறிந்து
உண்மை யுடன்
உழைப்பும் கூட
ஆணவமும் அலட்சியமும்
ஆள் கொல்லும்! - அதை
தவிர்த்து
ஆசையும் ஆர்வமும்
வளர்த்து - அது
சாதிக்கச் சொல்லும்
சாதனை வெல்லும்!
சொல்லிக் கொடுப்போம்
அன்புச் சொல்லில்
கொடுப்போம்!
வேறென்ன...
நோய் யற்ற வாழ்வே
குறை வற்ற செல்வம்!
நோய் யில்லா வாழ்விற்கு
குரு வேண்டுகிறேன்
இறை நாடி - மனம்
நிறை வேண்டுகிறேன்!
அறம் சார்ந்து
நெறி மாறாது- எம்
தமிழ் போல் என்றும்
இளமையாக...
இன்று போல் என்றும்
மகிழ்வுடன் வாழ...
வாழ்த்துகிறேன்!
எமது இனிய
தமிழ் புத்தாண்டு,
தமிழர் திருநாள்
பொங்கல் பெருநாள்
வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்
வளர்க தமிழகம் (தமிழ்நாடு)!
என்றும் அன்புடன்.
Comments
Post a Comment