பிரக்ஞானந்தா! வாழ்க தம்பி!

தம்பி வா!
தலைநிமிர்ந்து வா!
நேற்று (ம்) 
எங்கும் உன் பேச்சு...
செய்தி யில் தலைப்பாச்சு! 
சதுரங்க ஆட்டத்தில் 
புலி - நீ!
தமிழின பெருமை யே
தனி! - இனி
தமிழக பெருமை 
தரணி எங்கும்! 
நம்  பாரம்பரிய ஆட்டத்தில் 
சாதிக்க பிறந்தவன்!
வெற்றி தோல்வி பேச 
இது - வியாபாரம் யல்ல 
விளையாட்டு! 
இறுதி சுற்று பங்களிப்பே 
பெரும் வெற்றி தான்! 
தமிழகத்தின் தவப் புதல்வா 
சதுரங்க ஆட்டத்தில் 
முதல் வா(கை)!
பதின் வயதில் 
உச்சம் சென்ற 
பிரக்ஞானந்தா! 
வாழ்க நீ!
வாழ்த்துகள் தம்பி! 
இன்று தவற விட்ட வெற்றி 
நாளை வரும் உனைச் சுற்றி! 
கவலை வேண்டாம் 
இன்னும் கவனமாகட்டும்! 
இது- 
வெறும் காய் நகர்த்தல்
அல்ல  - 
அதி புத்தி 
பொறுமை  நிதானம் 
இவ்விளையாட்டின் 
நிதர்சனம்! 
முன்னேறி  பின் வந்து 
இடை புகுந்து 
குறுக்கே வராது 
இடை மறித்து ...
சுற்றி வளைத்து 
தலை கவிழாது 
விழாமல் வீழ்த்த வேண்டும்! 
காய் நகர்த்த 
அனேக பேருக்கு தெரியும் 
ஆனா-
உலக கோப்பையில் 
கலந்து கொள்ள 
இறுதி சுற்று வரை 
உலா வர
உனக்கு மட்டுந் தான் தெரியும்! 
இதில் சாதித்தவர்கள் 
பலருண்டு! 
சாதனைகள் காத்திருக்கு 
உனை கண்டு! 
இன்று- இது முதற் படி 
இனி - நீ!
காணப் போவது எல்லாம் 
வெற்றி படிகள் தான்! 
வாழ்த்துகள்! 
பிரக்ஞானந்தா 
நீ!
சாதிக்க பிறந்த அவன் 
சாதனைகள் காண 
சோதனை களை புறந்தள்ளு! 
வாழ்க வளர்க!!
இவ் உலகம் வியக்க...
வாழ்த்துகள் தம்பி! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1