வேலு நாச்சி அவ வீர சாட்சி! மறவர் பிறப்பு-அவள் மறவாத இருப்பு! வெள்ளையேன் கண்ணீல்- விரல் விட்டு ஆட்டியவர்களில் அவ விரலும் ஒன்று! வடக்கே ஜான்சி ராணிக்கு முன்னே தெற்கே பேன்சி(பேமஸ்) ராணியாய் ஆனவள்! வீர தமிழச்சி விவேகம் அவகட்சி! நயவஞ்சகன் நவாப்மூலம் நிர்கதியாய் ஆனவள் நடுத்தெருவிற்கு வந்தவள் - பின் அவன் குல நடுங்கச் செய்தவள்... நெற்குதிராய் நிமிர்தவள்! சிவகங்கை சீமைக்கு சீராய் புகுந்த மகிமை கணவர் இறந்ததும் போராய் எழுந்த பெருமை! உடன்கட்டை ஏறாது உடல் சுட்டே குறைக்காது நெஞ்சுக்குழி ஈரம் மறையாது அவ ராணி ஆன வீரம் மறக்காது! இரமாநாத புரம் ஜில்லாவில் பிறந்ததோர் நன்நாளில் சக்கந்தி கிராமத்தில் சக்தி வாய்ந்த நாமத்தில் வேலுநாச்சி பிறந்தார் நூற்றாண்டை கடந்து சொல்லாட்சி யாய் திகழ்ந்தார்! விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி இவ பிறப்பிற்கான அதிபதி! முத்தாத்தாள் நாச்சியார் இவளைப் பெற்றவள் மனமறிய கற்றவள் இனமறிய கற்பித்தவள் இளமங்கையாய்-இன வேங்கை யாய் பிரசவித்தவள்... கைவீச்சு கண்வீச்சு கத்திவீச்சு புத்திவீச்சு எல்லாமே அவளிடம் முழுவீச்சில் தான்! நேர்முக பேச...
Comments
Post a Comment