இந்து- மதம் அல்ல...!
இந்து மதமே -
அல்ல!
இந்து-
மத மல்ல!
இந்து-
கலாச்சாரம்!
வாழ்வியல் முறை
வாழ்வு இயல் தத்துவம்!
அதற்கு
தோற்ற மில்லை
தலைவ ரில்லை
நிறுவனரு மில்லை!
அண்டம் பேரண்டம்- முழுக்க
அருளாட்சி செய்யும்
ஈசனால்
ஈசர்களால்...
உருவானது!
பின் தோன்றிய
மண் ஈசர்களால்
உருவக மாக்கப்பட்டது!
இதை
இழிவாக பேசி
ஒழிக்கவும் முடியாது
அழிக்கவும் முடியாது!
இந்து-
சார் பற்றது
எதையும்-
சாரா -அது
ஊற்று!
அல்ல அல்ல
குறையாது
சொல்லி மாளாது
முழுமையாக
சொல்லவும் முடியாது
பருக பருக- பெருகும்!
நீயும் நானும்
ஒன்று
சிவமும்(கடவுளும்)- நாமும்
ஒன்று தான்!
நிலை தான் வேறு!
பிறக்கும் எல்லா
உயிர்களும்...
பிறப்பால் அனைவரும்
இந்து தான்!
இதற்கு-
என்றும் முடிவு இல்லை
ஒன்றான வடிவும்- இல்லை
போற்றி காப்போம்
போற்றா அது- போனாலும்
தூற்றா யது இருங்கள்!
நன்மை ஆகும்
நம்மை ஆக்கும்!
மூப்பு தான்
கணக்கிட்ட வயதில்லை
காப்பு தான்- செய்ய
அது ஒன்றும்
பலவீன மில்லை!
உலக முள்ள வரை
உலகத்தில் - உயிர்
இனங்கள் உள்ள வரை...
இந்து என்றொரு
சொல் - செயல்
சொல்லாது இருக்கும்!
மதம் - ஆக
அல்ல
நல்ல கலாச்சார
வாழ்வியல் - தத்துவ
மார்க்கம் ஆக!
வாழ்க வாழ்க!
இப்பிறவியில் மட்டுமல்ல
எப்பிறவியிலும்
மறவாது மாறாது
இருப் ஓம்!
Comments
Post a Comment