மிலாது நபி திருநாள்- வாழ்த்துகள்!
இந்து வழி வந்தவர்
தன்(னி) வழி நின்றவர்!
இசுலாமு-
புது மார்க்கம் தந்தவர்
தன் மொழி யில் சொன்னவர்!
ஈசன் வழியில்
ஈசாவிற்கு பின்
வந்த தேவ தூதர்!
தன் பிறவியில்
நிறை கண்டவர்!
வான் பிறை வணங்க
வழிபாடு சொன்னவர்
நிறையானவர் - எங்கள்
இறையானவர்!
மனிதனும் கடவுள்
ஆகலாம் ...
மறை சொன்னச் சித்தர்!
முறை வகுத்த
இசுலாத்தின் நாயகர்!
முகமது நபிகள் நாயகம்!
அவர்களது
பிறவித் திருநாள்
இம் மிலாது நபி திருநாள்!
எல்லா(ம்) சொன்ன அல்லா
அவர்களை வணங்குவோம்
வாழ்த்துவோம்!
தன் வழி
நின்றவர் களுக்கு
நல் வழி சொன்னவர்!
போற்றி புகழ்வோம்!
அம் மார்க்கம்
சார்ந்தவர்களுக்கு
வாழ்த்துகளை பகிர்வோம்!
வாழ்க! வாழ்க!
Comments
Post a Comment