உலக கோப்பை - 2023
விளையாட்டை
விளையாட்டாக பார்ப்போம்...
நல்லது!
நல்ல முயற்சி
போர் குணம்
உழைப்பு ஒத்துழைப்பு
உறுதியாக நின்றது
ஆஸ்திரேலியா
இறுதி வெற்றியில்!
வாழ்த்து வோம்
பாராட்டு வோம்!
இறுதி வெற்றிக்கு
இணைந்த கரங்கள்...
குழப்ப மில்லா
குழுவின் வெற்றி!
வாழ்த்துகள் அன்பர்களே!
பந்து வீச்சிலும்
ஓட்டங்கள் தடுப்பதிலும்
அவர்களது சிரத்தை
மின்னியது...
நம்மவர்கள் - சிறுத்தை
பம்பியது!
இயல்பு மாறி
செயல்ப் பட்டாலும்...
இயல்பை மாற்றி
செயல் பட்டாலும்
பலன் வீண் தான்!
பயன் தாராது
பலம் பெறாது!
விழமாட்டோம் என்ற
ஆவணத்தை விட
வீழ்ந்து விடுவோமோ...
என்ற பயம்
நம்மை கொல்லும்
எதிரிகள் வெல்ல
வழி சொல்லும்!
நடந்தது அதுதான்
விளையாட்டு தான்!
நம் மண்ணில்
நம் மன்னவர்கள் வீழ்ச்சி
மன மாறவில்லை
மனம் ஆறவில்லை!
இனி ஒரு முறை கூட
சுய பரிசோதனை செய்வோம்!
வெல்வது மட்டும்
விளையாட்டு அல்ல
தோல்வியிலும்
துவழாமல் இருப்பதும்...
துடித் தெழுவோம்
அடுத்த வெற்றிக்கு
பயணிப்போம்!
இது படியாகட்டும்
படிப்பினை ஆகட்டும்!
இறுதியில் வெற்றி இல்லை
இறுதி வெற்றி கிட்டவில்லை - ஆனா
இறுதி வரையிலும்
தோல்வி இல்லாத பயணம்
அதுவும்- ஓர் வெற்றி யே
அதுவும் இந்திய மண்ணில்
இந்திய அணி தவறவிட்டது!
தவறு செய்து விட்டது
எனச் சொல்ல முடியாது
தவறுகளால் விட்டது!
கடின உழைப்புக்கும்
கஷ்ட முனைப்பு க்கும்
வருந்தி - மகிழ்ந்து
வாழ்த்து தெரிவிப்போம்!
பயிற்சியும் முயற்சியும்
அடுத்த வெற்றி
கிடைக்கப் பெறட்டும்!
வாழ்க வளர்க!
விளையாட்டை
விளையாட்டாக பார்ப்போம்
வினை ஆட்டமாக பார்க்காது...
இனி வரும் போட்டிகள்
அதனை சரிக்கட்டும்!
உலக கோப்பை
அது - உலவும் கோப்பை!
அடுத்து யாருக்கோ...
நாளை நமதே - என
இப்பவும் நம்புவோம்!
வாழ்த்துகள் வீரர்களே!
Comments
Post a Comment