2024 - வாழ்த்துகள்!
நடப்பதும்
கடப்பதும்
நன்மை காண...
ஆண்டின் முதன்மை நாள்
ஆங்கில மாதத்தில்
ஆரவாரம் குறையாது
எண்ணங்கள்
எண்ணிக்கையில்
தொடக்கம்...
செய்யாதது
செய்ய வேண்டியது
ஒரே நாளில் வந்து போகும்
அந்த எண்ணக் குஷி
இந் நாளில் தந்து போகும்!
மறு மறு தினங்கள்
மறந்து(ம்) போகும்
காலம் காட்டும் காட்சியில்
கரைந்து போவோம்!
சில விடயத்தில்
உறைந்து போவோம்!
பின்-
வேறு நினைப்பின்றி
இயல்பாய் இயங்கி போவோம்!
முதல் நாள் கொண்டாட்டம்
மறந்து போகும்
மீண்டும் ஆண்டின்
கடைசி தினத்தின்
இரவு நேரத்தில்
அடுத்த ஆண்டின்
முதன்மை நாளுக்கான
ஆரவாரம்...
கடந்த ஆண்டின் குறைகள்
மறந்து போகும்
அரசியல் தேர்தல் போல
இதுவும் தொடரும்...
வாழ்த்துகள் சொல்வது
நல்லது தானே!
எல்லோரும் நல்லாயிருக்க
நலமா இருக்க
எல்லோருக்கும்
வாழ்த்துகள் சொல்வோம்!
மறப்பதும்
நடப்பதும்- கடப்பதும்
நன்மை காண...
நல்லதே!
வாழ்க வளர்க!
நானும் வாழ்த்துகள்
சொல்வேன்...
சொன்னேன் !
என்றும்
அன்புடன்.
Comments
Post a Comment