கடவு சீட்டு!
கடல் தாண்ட
தகுதி!
இனி - அயல் நாடுகளில்
அந்நியனாக
அந்(த) நீயாக
அங்(கு) நீ ஆக - வலம்
வரலாம் வரலாம்...
ரைட் ரைட்.
அவ்வளவு ஆர்வமா?!
ஆச்சரியக்குறி!
இனி போய் வெளி நாட்டில்
வேலை பார்க்கவா!
இல்லை - இல்லை
அப்புறம்
வேடிக்கை பார்க்க வா!
அம்புட்டு வசதியா..
இல்ல -
வாய்ப்பு கிட்டினால்
பார்க்கலாம்...
கலாம்.. லாம்..ம்.
அதுதான்!
அனுகூல நட்பாய்
அழைத்தால்..
அழைப்பார்களா உன்ன!
ஆள் இருக்கா?
அது - கேள்வி குறிதான்.
பின்-
வாய்க்கு மானால்
வாய் பிளக்காது
அல்ல - திறக்காது
செல்ல லாம்.. ம்!
நினைப்பா!
இல்ல-
ஆனிப் போய்
ஆவணி வந்தா...
கஷ்டம் ஒன்றுமில்லை
காத்திருப்போம்!
வாய்க்கு மானால்..
எதற்கும் இருக்கட்டு மென
தேவை தானே - இந்த
கடவு சீட்டு !
கைக்கு வந்தது
வாராது இருப்பது
அந்த நுழைவு இசைவு!
அது வேற..
யார் தருவார் இந்த
அறி யா சனம்!
வா-ச-அகம்
கவிதை யின் இடையில்
வரும் மூன்று புள்ளிகளாய்
மற்றும், இன்னும், பிற..
வழி உண்டா
யோசிக்க(னும்)
அறிய
தெரிவித்தேன்!
Comments
Post a Comment