அகவை கூட...

குதித் தோடும் 
கால்கள்! 
குன்று தாண்டும் 
குவிந்த மலைச் சுற்றும்!
குளம் குட்டை விடாது 
படைச் சிறக்க 
நடை சேர்க்கும்...
வலு விழந்து போனால்
குழவி தாண்டா
தடை இருக்கும் 
நடை குறைக்கும்! 
விட்டுச் சென்ற 
தென்றலே  - இனி
இட்டுச் செல்வா யோ!
ஏங்கும்...
எதிலும் ஒன்றி போகாது 
மனம்  - குன்றிப்  போனது! 
அகவை அறுபதை நெருங்க
ஆகி போகுமோ 
இது வெல்லாம்...
வில் ஏந்த வில்லை 
வேல் ஏந்த வில்லை 
வே தனை ஏந்த வேண்டுமா!? - இனி 
வளையாதா 
வலை விலகாதா 
அகலாதா  - இனி 
விலை போகாதா?!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1