ஆண்-டால் (doll) அடிமை!
ஆண்- டால்( doll )
அடிமையாய்...
ஆண்டாள்!
காதல் பித்தாய்
பற்றாய், அன்பால்
நோ யுற்றாள்...
கர மறந்து மா தொடுக்க
மன மறந்து பா தொடுக்க
காதல் சேர - தமிழ்
சேர்த்தாள்!
தன் காதலனை
கண்ணன் அவனை
கருப்பு மன்னவனை
கரம்பிடிக்க -
அடம் பிடித்த
பெரி ஆழ்வார் மக
பின் - ஆள்வாரின்
மனை யானாள்!
அவ் வாண்டாள்
திரு வள்ளி புத்தூர்
ஆண்டாள்!
அப் - பா
திருப்பாவை!
அதில் ரெங்கி யவன்
திரு ரெங்கன்!
பா-மா தொடுத்து
பாமா இடத்தில் நின்று
காதல் வென்று
சாமர்த்திய மொன்று
அது- அவளுக்கு
சாத்திய மானது
அதுவே - பின்
சத்திய மானது!
மார்கழி திங்கள்
மனங் குளிர
அவள் பாடிய
திருப்பாவை
தினப்பார்வையாய்
தினந் தோறும்
திரு ரெங்கத்தில்!
அரங்கன் இருக்கு ம்
இடமெல்லாம்- இருப்பாள்
ஆண்டாள் ஒளியாய்
திருப்பாவை ஒலியாய்!
அவளது பூசை
அரங்கனின் ஆசை
நமக்கு இனிய
தமிழ் ஓசை!
அன்று -
அவளது ஆர்வம்
ஆச்சரிய குறியாய்!
பிறகு - இது
நேருமோ கைகூடுமோ?
என கேள்வி குறியாய்
நிகழ்ந்தது! - அவளது
நிழல் அகலாது
அவனிடம் ஒன்று சேரவும்
சேர்க்கவும்
நிகழ்ந்த அதை
மகிழ்ந்த அதை!
இன்னும் தொடர்கிறதே...
முடிவில்லா புள்ளிகளாய்!
ஆண்டாள்!
அன்பிற்கு இல்லை அழிவு
அவ- அரங்கனிடம்
கொண்ட மகிழ்வு!
இது- மனிதன்
இருக்கு மட்டுமல்ல...
இந்த மண் மறையும் மட்டும்
அந்த -
விண் நிறைய முட்டும் !
நினைந்து இருக்கும்!
நிறைந்து(ம்) இருக்கும்!
Comments
Post a Comment