நட்பு என்பது!

எது நட்பு! 
நண்பன் யாரென..
அன்னை யிடம் கேட்டேன் 
உச்சி முகர்ந்து 
உளமாற சிரித்தாள்!
தந்தை யிடம் கேட்டேன் 
தோளோடு அனைத்து 
இருக்கிச் சிரித்தார்! 
ஆசானிடம் கேட்டேன் 
சொல்லிக் கொடுப்பவன் 
நம்பிக்கை யை
சொல்லில் கொடுப்பவன்! 
வாய் விட்டுச் சிரித்தார்..
உறைவிடம் கேட்டேன் 
அது- உசத்தி யென 
சொல்லி சிரித்தனர்! 
அக்காவிடம் கேட்டேன் 
ஆகாயம் பார்த்துச் சொன்னார்..
அதை -
சொல்லால் அளவிட 
முடியா தென!
தங்கையிடம் கேட்டேன் 
உடன் பிறவா பிறப்பு 
மகிழ செய்யும் 
புற உறுப்பு!
ஆறாவது விரல்..
நண்பனிடம் கேட்டேன் 
கை குலுக்கி 
கட்டித் தழுவி 
நெஞ்சோடு சேர்த்துச்
சொன்னான்..
நீ! 
எனது இன்னொரு 
நான்..
நான் - என்றும் 
நீ! ஆக..
இறையிடம் கேட்டேன் 
என்னைப் போல்..
அவனும்  - உனை
நிறை கொள்ள செய்பவன்! 
பறை அடிக்காது 
பிறை போல் ஒளிரும் 
நண்பன் இருந்தால்...
அனைத்தும் 
மறக்கச் செய்யும்!
அவை  அனைத்தும் 
எனக்குச் (உனக்கு) சொல்லும்..
நண்பன் யாரென 
நட்பு எது வென்று..!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1