நட்புடன்.. பகிர்வு!

சொல்லாடுதல் 
சுகந் தான்..
சேர்ந்து  - நட்பு டன் 
கொண்டாடுதல் தனி சுகம்! 
கண்ணாடி குவளையில் 
கண்டெடுத்த திரவ மது..
கால் நிறப்பி  - நிறுத்தி 
மீதி நீராக
விதி மீறாது 
மதி மாறாது
நிதானமாக சுவைக்க 
நீ! தானமாக கொடுக்க 
சொற்கள் வழிந் தோடும்
மிகுந் தோடும்! 
தீடீரென பதவி உயர்வாய் 
பெருஞ் செல்வந்தனாய் 
வீரங் கொண்ட மறவனாய் 
நன்றி மறவா 
நினைவுடன்..
நரை மறந்து நிறை கண்ட
உயர் புருடனாய்
காணத் தெரிவாய்..
சீசா காலி யானதும் 
வீசா இல்லாதே - வெளி 
தேசம் பறப்பாய் 
நேசம் மறவா 
பாசத்தால் பயணிக்க..
உச்சத்தில் உளரலும் 
உண்மையாய் போகுமே!

நாட்டாண்மை யா - நானிருந்து
நாளும் சொல்வேன் 
நட்பின் பகிர்வு 
நண்பனின் பரிவு 
மறக்குமே பிற..
பறக்குமே மனம் 
இறக்கை இல்லாது!
இது போல் எதுவும் 
சொல்லாது! 
நட்பு பொல்லாது- வென
வார்த்தைக்கு பஞ்சமில்லை 
வாதம் கொஞ்சமில்லை 
வர்க்க கர்வமில்லை 
வீழ்வேன் யென 
கவலையு மில்லை
தீர்க்க மாய் தீங்கு நேராது 
நண்பன் உடன் இருக்க..
பாராது முகம் சுருக்க 
தனங் கொண்டு ஆகாதது 
தனி ஒருவன் கண்டு 
ஆற்றுவான்! 
மாற்றமும் மகிழ்வும்
என்றும் மாறாதே 
பயணிக்கும் நட்பு! 
என்றும்-
நீ!
என் நண்பேண்டா..!




Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1