உடல் வளர்த்தேன்..!
உடல் வளர்த்தேன்
உயிர் வளர்த்தேன்..
உண்மையில்-
வளர்ந்தேனா!?
உன்னதம் மறந்தேனா-
மறைத்தேனா..?!
அரை நூற்றாண்டு
அறியாதே
அவதியுலும் அவசரத்திலும்..
வேடிக்கை யாய்
விநோதமாய்
ஒரு வளர்ச்சி..!
அதன் பின்
உண்மை யறிய
உன்னத மறிய
உலக மறிய..
அது - முடியாது
அப் பெரிய அறிவு
நமகில்லை!
நானும் - அவனும்
வேறல்ல..
மனம் சொன்னது!
வேடிக்கை யே
வாடிக்கையாய்..
விபரீதங்களும்
வினோதங்களும்..
சந்திப்பில் - வீங்கித் தெரிய
சிந்திப்பில் ..
நிதானம்!
நகை இழப்பு
பேச்சு குறைப்பு..
ஆமா!
பேசிக்கலி நான்
அப்படி இல்லை யே
என்பதை தவிர..
வேறு ஒன்றும்
சொல்வதற்கு இல்லை!
உறவு சொன்னது
நட்பு சொன்னது
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
நிகழ்வு செய்தது!
புதுப்பிக்காத உரிமப்
படிவமாய்..
உரிமை இல்லாதது
எதுவும் - என்னது இல்லை
அவை எனக்குச்
சொந்த மும் இல்லை!
மனதுக்குள் -
குயில் காகம் கிளிகள் கத்த..
சுத்தமாய் அறுந்து
போனது உலகம்!
அவசரக் கோளாறா
ஆர்வக் கோளாறா..
அறியாது - அறிய முயலாது
தொடர்ந்து பயணிக்க..
வேகத்தடைகள்
வழி யெங்கும்!
வேதனையாய்
வலி - எங்கும் !
வெறுத்தால்
மறுத்தன..
ஒதுங்கினால் ஒட்டின!
ஒட்டினால்
வெட்டின ஒதுங்கி!
உடலும் உறவும்
வெறுக்காது ஒதுக்காது
இருந்தாலும்..
வாய்ப்பில்லை ராசா!
அதற்குள் - வந்தோடின!
சரி - இனி
அவ்வளவு தான் என்கிற
நினைப்பு தலை தூக்க..
விடாது கருப்பாய்
வெவ்வேறு ரூபங்களில்!
காரணம் காரியம்
அறியாது
அறிய முற்படாது
நானிருக்க..
எல்லாம் நன்மைக்கே
இதுவும் கடந்து (ம்) போகும்
வாசகம் வசதியா
வாயி லெடுக்க..
ஆம்!
காலம் கடந்து தான்
போனது!
அது தான் - நான்!
கண்டதும்..
Comments
Post a Comment