வெட்கங் கெட்ட.. நான்!
நான்!
நானாக நான்
இருந்த வரை..
இருக்கும் வரை
இந்த - நானாகிய
எனக்கு
எந்த பிரச்சினை யும்
பிரிவினை யும் இல்லை!
நான்
இப்படித்தா னென
என்னை வேறொரு
நானாக பார்க்கும் போது..
நான் நானாக இல்லை
நான் நல்லவனாகவும்
தெரியவில்லை
அவர்களுக்கு!
அது சரி -
நான் எப்படி
உங்களுக்கு பிடித்த
நானாக
இருப்ப தென கேட்டால்..
எந்த நானும்
இந்த நானுக்கு
பதில் - சொல்ல வே இல்லை!
சரி - எப்பவும்
நான் நானாக வே
இருந்து விட்டு போகலாம்..
பிறர் எதிர் பார்க்கும்
நானாக - நாம்(ன்)
இருப்பது கடினம்!
நான் - நானாக
ஏன் இன்னும்
நானாக- நான் இருக்கேன்..
நொந்த நான்!
வருத்தம் மிகுந்த
சொந்த நான்!
பிறகு -
எந்த நானாக - நான்
இருக்க ஆசைப் பட்டேனோ
அந்த நானாக - நான்
ஆக முடியவில்லை
என்பதை - இந்த
உண்மையான நான்!
மாறாது இருக்க..
மாற்றமில்லா நான்
மாறியதாக
மாறிவிட்டதாக
பிற நான் பழிக்க..
பரதவித்துப் போனது
இந்த நான்!
பறவைக்கு கூட பதிவிடும்
நான்-
பிற நானுக்கு பரிவாய்
இருந்த இந்த - நான்!
பாவம்
கண்ணாடி முன்
முகமிழந்து புலம்பிய
நான் !
அது நானா
அந்த நான்
நானா யென..
Comments
Post a Comment