காதல்- ன்னா...!

சட்டென கேட்டேன் 
பட்டென..
பதில் சொல்!
தேவா! 
காதல்-ன்னா  என்ன?!
மனதில் பட்டதை 
கவியில் தொட்டதை..
காலங் காலமாக..
அலசப்பட்டும், பேசப்பட்டும்
செய்யப்பட்டு வரும் 
ஒரு  வினோத - விந்தை ஆன
செயற் கூற்றை..
எப்படி? எங்ஙனம்
சட்டென சொல்வது! 
பவ்யமா - என் பதிலை
இப் பதிவில்..
நண்பா! 
பலரும் தொட்ட விடயம் 
முடியாது விட்ட விடயம்! 
நான் மட்டும் 
தொட்டு - விட முடியுமா!?
முயற்சி க்கிறேன்..
சட்டியில் வைத்து - மாவை
அவித் தெடுத்தால் 
இட்லி! 
கல்லில் ஊற்றி 
வார்த் தெடுத்தால் 
தோசை! 
அதை யே-
குழிச் சட்டியில்  ஊற்றி 
திருப் பெடுத்தால் 
பணியாரம்! 
அது போலத் தான் 
காதல்..!
பெயர் ஒன்று - அதன் 
பொருளும் வகைகளும் 
வெவ் வேர்  ஆனவை! 
செப்புகிறேன்..
செவி மடி!
காலைக் காதல்  
இரவுக் காதல் 
உறவுக் காதல் 
உண்மை காதல்
 உணர்வு காதல் 
புணரும் காதல் 
புரியாக் காதல் 
புதிராக் காதல் 
கட்டாய காதல் 
காத்திருப்பு காதல் 
காரியக் காதல் 
காரண காதல் 
காசுக்கான காதல் 
கல்யாண காதல் 
கள்ளக் காதல் 
உறவு தாண்டி காதல் 
ஊர் தாண்டி காதல் 
கனாக் காதல் 
கர்வ காதல் 
காமக் காதல் 
கவர்ச்சி காதல் 
காதலால் காதல் 
ஆதலால் காதல்! 
சும்மா காதல் 
சுகமான காதல் 
சுமுகமான காதல் 
சொகுசு காதல் 
பரிசு காதல் 
பவிசுக் காதல் 
பார்த்து காதல் 
பார்க்காது காதல் 
சைவ காதல் 
அசைவக் காதல் 
அசிங்கமான காதல் 
சகோதர காதல் 
சத்ரிய காதல் 
சத்திய காதல் 
தொழில் காதல் 
தொழிலாய் காதல்..
அறிந்து காதல் 
அறியாக் காதல் 
அனைத்திலும் காதல் 
அது- அவசியக் காதல்..
ஆக-
பிறப் பொக்கும் எல்லா 
உயிருக்கும் 
பொதுவான - பொறுத்தமான  காதல்! 
காத லின்றி ஏது மில்லை 
இங்கு  - அது போல் 
யாரு மில்லை !
ஏதோ ஒரு வகையில் 
ஏதோ ஓர் இடத்தில்..
நிறுவ  நிறப்ப
தற் காக்க  - தக்க வைக்க 
தனை காக்க..
காதல் ஒன்றே வழி! 
நீராய் நெருப்பாய்..
ஆறாவது பூதமாய் 
ஆகி போனது காதல்! 
இசையிலும் இயக்கத்திலும் 
ஆசையிலும் ஆர்வத்திலும் 
கூட காதல்..!
அன்பின் சின்னமாய் ஆனதும் 
அதுவே- அசிங்கமாய் போனதும்  காதல்! 
காதல் - பலருக்கு 
மிகை யாகி போனது..
சிலருக்கு சிகையாகி போனது! 
இன்னும் சில பேருக்கு 
பகை ஆகி போனது! 
நமக்கு வகையாகி போனது!
எழுதுவதற்கு..
சாதல் வரை கூட 
வரும் காதல்! 
ஆனா- அது எப்படி 
எங்ஙனம்  எவ்வாறு 
எனத் தெரியாது! 
அது வேறுபடும் 
மனிதர் களுக்குள்
மாறுபடும் !
இது வென - அறுதியிட்டு 
சொல்வதற்கு இல்லை! 
யாரும் இப்படி தான்  - யென
உறுதி படவும் சொல்ல வும் 
இல்லை! 
காதலால் - சந்தித்தவர்கள் உண்டு
செத்த வர்களுமுண்டு!
வாழ்ந்தவர்கள் வுண்டு
இழந்தவர் களுமுண்டு! 
உயர்ந்த வர்களும் வுண்டு 
உருப்படாது போனவர்களுமுண்டு! 
வுண்டு உண்டு முண்டு..
இது- நிறந்தரமும் இல்லை 
இதற்கு 
 நிறந் தருபவர்களு மில்லை!
இதை - செய்யாதவர்களும் 
யில்லை 
முழுமையாக செய்தவர்களும் இல்லை! 
யில்லை இல்லை மில்லை..
காதல்-
அரசனிடத்திலு முண்டு 
ஆண்டி இடத்திலு முண்டு! 
இதை-
தவிர்க்க வும் முடியாது 
தள்ளி வைக்கவும் முடியாது! 
இது- தொடக்க மில்லா 
முடிவாய்..
முடிவில்லா தொடக்கமாய் 
தொந்தர வாய்..
தொடரும் 
உணர்வாய் உயிர் உறுப்பாய்
உடன் இருக்கும்..
உண்மை மறைக்கும்! 
ஆனா- பொய் இல்லாத
முக முண்டு! 
உண்மை என்று சொல்லா 
வகை உண்டு! 
சிலருக்கு வாய்க்கும் 
பலருக்கு பொய்க்கும்..
உலக அதிசயங்களை 
உற்று நோக்கி னால்..
அங்கே  - அது வும் 
அதிசயமாகத் தான்  இருக்கும்! 
காரணம் தெரியவில்லை 
அசாதாரணம் அதற்கில்லை!
காதல்  - சொல்லில் 
புரி வதில்லை!
அது சொல்லிப் 
புரிவது இல்லை! 
சொல்லிலும் புரியாது 
வெறும் செயலிலும் புரியாது! 
ஆனா- செயல் புரியும்..
இது- தேவையா இல்லையா
என்பதும் தெரியவில்லை 
இதை- ஒதுக்கவோ
மறுக்க வோ இங்கு 
எவரு மில்லை..!
காலத்தை கடக்கும் காதல் 
கடக்க உதவும்..
காதல் இல்லாக் காலம் 
கண்ட தில்லை  
காலம் காதலை 
உண்ட தில்லை! 
ஆடவர் காதல் ஆலாதி..
பெண்டீர் காதல்- பெருமை! 
காதல் இல்லா - எதுவும் 
வெறுமை!

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1