ஆல்- யோசனை.. கூரும்!
அநேக-
நல்லோர் களும்..
பெருத்த மனம்
உள்ளோர் களும்!
பொறுத்துக் கேளீர்..
செவி மடித்து
சேமம் வடித்து ..
வினாவினேன்
தங்களை- தாரீர்!
பதிலறிந்து..
நானும் காங்(கி)சிரசு
குடும்பம் தான்!
அப்படி தானே
எல்லோரும் சொல்வர் அப்ப..
ஆரம்பத்தில்
அது மட்டுந் தானே !
அய்ம்பது ஆண்டு காலமாக
ஆட்சியில் பார்க்க வில்லை
தமிழ் அகத்தில்!
வெவ்வரம் தெரியும் போது
அல்லது
தெரிந்த போது..
மூன்றெழுத்து
மந்திரச் சொல்லின்
செவந்த கரம் ஆட்சியில்!
கல்லூரியில் அடியெடுத்து
அரசியல் நோக்கும் போது..
தீவிர சிவப்பு சட்டை!
கையில் அறுவா சுத்தி
வைத் தில்லாத குறை..
கருப்பு சட்டைகளின்
கருத்து தாக்கம் இழுக்கு..
முழுதும் போகாது
கருப்பு சிவப்பா ஆகி
போனேன்!
இரு இலையால்
தரு தலை ஆனதோ
தமிழகம்!
என்றெண்ணி..
நன்றென - சூரியன்
உதிக்கட்டும் இனி - என
பணி செய்து பயணிக்க!
புரட்சி தலை
இருக்கும் வரை
நடவாது போக அவரது
மறைவிற்கு பின்
இரு இலை - நிலை தடுமாற
கோட்டையில் சூரியன்
உதிக்க!
உற்சாக மாக..
ஆண்டுகள் இரண்டு
உருண்டோட..
மத்திய பெருந் தலை
காந்திய வாரிசு
ஸ்ரீ பெரும் - ஊரில்
குண்டு வெடிப்பு
பலி ஆனார்!
புலி பயம் ஆனது!
தீவிர வாதம்
தீராத விவாதம்..
மறவாத செயல்
மறையாத பழி..
மறக்க பலநாள் ஆகியும்
வெப்பம் அடங்கு முன்
குழப்பங்கள் கூடின..
திரைத் திலகம்
தரையில் வளம்..
வேகாத பருப்பா
வேண்டா வெறுப்பா
பாவமாய் பார்க்கப் பட்டது!
ஏணி சறுக்கி விட
ஏன் - நீ! சான்று கூற
விட்டது ஆசை!
விளம்பர ஓட் டோட..
புறாவும் சேவலும்
ஒன்று சேர..
இரு இலைகளாய் - மீண்டும்
நிலை மாறின!
புரட்சி பெண்
நன்கு படித்தவர்
திரை நடித்தவர்
தைரியம் படைத்தவர்
நாலும் தெரிந்த அவர்
நானும் தெளிய
ஆட்சி மாறியது!
காட்சி மாறியதா?!
அவுன்சில் போனது
எல்லாமே- அளவற்று
போனது!
ஆற்று நீரை
அய்யா குடி அம்மா குடி
என - ஆளுக்கொரு
கை யாய்..
பொறுத்தது போதும்
இனி இனக் காவலர் தான்
தலைக் காவலர்..
பகை மறந்து- தெரியாத
பேய்க்கு தெரிந்த
பிசாசு மேல்
எனக் கருதி..
தலைகள் பல சொல்ல
மீண்டும் உதித்தது
சூரியன்!
அதன் பின் தான்
வலித்தது!
இரண்டும் மாறி மாறி
வலி தந்தது!
அராஜகம் அறங்கேற..
இலவசங்கள் வீடேற
கசப்புணர்வு..
சரி இவர்கள் வேண்டாம்
என்ற மாற்று
யோசிப்பில்
கருப்பாய் ஒருவர்
முரசு அடிக்க..
அட! - நம்ம ஊறு
நம்ம ஆளு
சேர்ந்து அடிப்போம் யென
யோசித் திருக்க..
அதுவும்
கட்டெரும் பாய்
ஆகி போனது!
இடையில் சைக்கிளும்
ஓட்ட பழக..
அவருக்கு ஓட்டு பழகவில்லை
வெறும் மூப்பு - ஆனார்!
விவசாய சின்னம்
வீரப் பேச்சு..
விவேக மாகப் பட்டது!
அருகே சென்று பார்த்தால்
வீண் - எனப் பட்டது!
மீண்டும் ஒரு சறுக்கல்
ஒரு விலகல்..
நடிகர் அல்லாது ஓர்
ஆட்சி!
ஆனந்தப் பட்டோம்
நிலைக்க வில்லை
நினைக்கும் படியு மில்லை!
புது அவதாரமாய்
ஆண்டவரென.. ஒருவர்
கையில் டார்ச் வுடன்
வாயில் புது கோர்சுடன்
கண்களை உருட்டி
ஆகா!
ஒளி மயமான எதிர்காலம்
திரையில் போல
திருப்பம் தர கூடும்!
வாக்களித்தோம்!
வாய்ப்பளிக்க..
அதுவும் - இப்ப
வாய் புளிக்க
இருட்டில் எருமையாய்
கலைந்தது..!
புது வர வொன்று
புலியாய் வருகுது!
ஏற்கனவே-
புலி வருது புலி வருதுன்னு
ஒரு புலி வராதே போனது!
அது லேட்டாகவும் வரவில்லை
லேட்டஸ்ட் டாகவும் வரல்ல..
இவர் - ஈராண்டு
பொறுக்கச் சொல்லி..
அது வென்ன செய்யும்
அதையும் பார்ப்போம்..
இந்த வீரியத்தில்
விடயம் இருக்கு மோ!
ஆனா என்ன
இதுவரை வந்தது
எனக்கு மூத்தது!
இது - கொஞ்சம் சின்னது
இவண் வேறு மாதிரி
சொல்ல வைக்குமா!
அல்ல -
அதை மாதிரி யென
காண வைக்குமா?!
உலகாண்ட தமிழனுக்கு
வந்த சோதனை!
இது தொடருமா..
பரவி படருமா!
மத்தி மலர்
இங்கு மலர..
ஒரு அண்ணா
மலை மலையாய் ஏறி
குதித்து- குதித்து
நடக்கிறார்!
சொன்னது போல்
நடப்பாரா
பின்னர்- இல்லை
நடை சறுக்கு வாரா..!
அது - ஒரு மதம்
சார்ந்த தாம்!
நாம்- இதுவரை
சாராதே- சேராதே
இருந்து ள்ளோம்!
ஆதலால்..
சுயேச்சை களுக்கு போட
அவர்கள் யாரும்
தெரிந்த வர்கள் அல்ல
மனமும் இல்லை!
நோட்டா விற்கு..
ம்ம் கூம்..
வீணாக்க விரும்பவில்லை!
பின் என்ன செய்வது?
தேர்தல் வேறு
நெருங்கு கிறது
அதைத்தான் உங்களிடம்
கேட்கிறேன்..
நல்ல அவர்களே
வல்ல அவர்களே!
விபர மறிந்து
விரைவில் கூறும்..!
Comments
Post a Comment