காமத்தின் கதவுகள்..!

காமத்தின்
கதவுகள்..
கண்கள்! 
மூடித் திறக்கும்..
திறக்க மூடும்! 
பார்த்து பசியாறும்..
சில நேரம்-
பார்த்தே.. பசிவூறும்! 
வாயிற் தாண்டி 
வேடிக்கையாய் போனாலும் 
வாடிக்கை மாறாது
வந்து விடும்! 
அது- மனதில்(ன்)
இருக்கை போட்டு
அமரவில்லை..
நார் கட்டில் போட்டு
உறங்குகிறது!
பேசிப் பழகும்..
பேசாதும் பழகும்! 
எதிரில் பேசுவதை விட..
எண்ணத்தில் பேசுவது 
அதிகம்! 
காவல் தாண்டும் 
காதல்-
அதையும் தாண்டும் 
இது- காமம்! 
கால் விலக்காது - அதன் 
நெற்றியில் புள்ளி வைத்து..
தலையில் அடித்து கொண்ட
நாளுமுண்டு!
முழுதும்- வெளி சொல்லாது 
என் - புத்தி தாண்டாது!
இம் மொழிக்கு 
எழுத்தில்லை..
மெய் காண - உயிருண்டு! 
ஆறாய் ஓடும்..
அருவியா கொட்டும்! 
அள்ளி அருந் தீயும் 
முழ்கி குளித்து எம்- அதன் 
ஆசை தீரவில்லை..
ஆர் வம் குறைய வில்லை! 
கலையா 
நெஞ் யோரத்தில் 
அலை அலையாய்..
கிட்டங்கியா கிடங்கா
தேங்கிய அது 
குறையவில்லை..
ஆவல் தூண்டும் 
நூலகமாய்..
அத்தனையும் படிக்க 
முடியவில்லை 
எல்லோரும்  வேறு வேறு மாதிரி! 
எல்லோருக்கும் ஒரே மாதிரி..
கிறுக்குப் புத்தியாய் 
புத்தி கிறுக்காய்..
பிராண்டிய காயம் 
வெளித் தெரியாது! 
மனதில் ஒளிந்திருக்கும்
மாய நூல்..
நான்-
எப்படி சொல்வேன் 
அவளும் தான் 
எப்படி சொல்லுவா
இந்த புத்தகம் - இன்னும் 
படித்து
முடிக்கப்பட வில்லை என்று..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1