சிட்டு குருவி தினம்!
சிட்டு எனும் உயிரி
அவ்வினம் குருவி!
உருவத்தில் சிறியது
இப்ப-
உயிரினத்தில் குறையுது!
மிக உயரே பறக்காது
மிக அருகே சிறகை
விரிக்காது!
வீடு சுற்றித் திரியும்
சிட்டாய்..
பழுப்பு சாம்பல் நிறத்தில்
பட்டாய்!
பார்த்தோமே
சன்னல் ஓரத்தில்..
உள் விட்டத்தில்
வெளி முற்றத்தில்!
கீச்சு.. மொழி பேசும்
அதன் சிறு கூடும்
எழில்(அழகு) பேசும்!
வளர்ப்பதற்கு வசதியில்லை
வந்து அமருமே
அசதியில்லை!
பார்க்கவே பரவசமாய்
பறக்குமே நவசரமாய்!
அழகு சிறகுகள்..
சிரிக்கும் அலகு!
பார்க்கும் முன் பறக்குமே
பழகும் முன் விலகுமே!
சிறிது நீரைக் கண்டாலும்
சிலிர்த்து குளிக்கும்..
சிரித்து குரலெடுக்குமே!
இதை தான்
பாரதி கண்டானோ..
தனது பாட்டாக்கி
கொண்டானோ!
அறிய வகை பறவையாய்
அநியாயமாய் போச்சே..!
அதன் அழிவை குறைத்து
அழகை ரசிப்போம்!
அதற்கு-
வாழ வழி யில்லை
சுற்று சூழல் சரியில்லை!
பாதுகாக்காது போன
பல விடயங்ககளில்
இதுவும் ஒன்று!
சிட்டு குருவி ஒரு
பறவை இனம்!
இன்று -
அதற் கென்று(கென)
ஓர் தினம்!
நல்லதை
நினைந்து கூறுவோம்..!
20.03.24
Comments
Post a Comment