தேர்தல் காட்சி - நாமே சாட்சி!

இந்த-
பொது தேர்தலை
பொதுப் பிரச்சினையாக 
அனுகுங்கள்.!
பொதுவாய்- பிரச்சினையா
பார்க்காதீர்கள்..
நாட்டின் வளர்ச்சிக்கு 
உதவும் நப(ரை)ராய் 
தேர்ந் தெடுங்கள்..
நபருக்கு உதவும் 
வளர்ச்சியாக தேர்வு 
செய்யா தீர்கள்! 
பலன் என்ன 
பயன் என்ன  - சொல்லும் 
நய மென்ன..
யோசித்து  - பயமில்லா 
தேர் வாகட்டும்  - புது
தேர்த லாகட்டும்! 
இங்கு-
முழு நல்லவரும் 
அதிக கெட்டவரும் 
எவரு மில்லை..
இருப்பதில் 
தேர்வு செய்வோம்! 
நிறை இல்லாது போனாலும் 
குறையில்லா ஒருவரை 
குறை இல்லாதவர் 
இல்லை என்றாலும் 
குறைந்த- குறை  உள்ளவர்
எவரோ?! - அவரே..
வேறு வழி யில்லை!
அரசின் செயல்களை
ஆட்சி ஆள்பவர்களை 
விமர்சனம் செய்யுங்கள்
தவறில்லை..
அவர்களது அந்தரங்கம் 
நமக் கெதற்கு !
நாலு பேர் இருக்கும் 
ஒரு வீட்டில் 
நால்வரும் வேறு வேறு மாதிரி!
நாற்பது பேர் இருக்கும் 
அரசின்  சபையில் 
கொஞ்சம் நாரத் தானே 
செய்யும்! 
தெரிந்த அதை சொல்லுங்க 
தேவை இல்லா அதை 
சொல்லாதீர்கள்! 
ஒரு கட்சி சார்ந்து 
இருங்கள் - தப்பில்லை..
சார்ந்தே இராதீர்! 
அது- நல்லதற் கல்ல 
பல வகையில் 
கண் மறைக்கும்! 
நம் நாடு
நம் தேசம் - நம்ம நேசம் 
நம் அரசு- நல்(வல்)ரசாக
 நம்மில் ஒருவர் தான் 
(மக்களில் ஒருவர்)
புது உறுப்பினர்!
அதில்  - அந்த 
பாதிப்பும்  பங்களிப்பும்
நமக்கு(ம்) தானே! 
தனி மனித விமர்சனங்கள் 
வேண்டாமே..! - நண்பர்களே 
அரசியல் அசிங்கம் 
ஆரோக்கியமாக நடக்கட்டும் 
நாளைய ஆட்சி 
நல்லதாய் அமைய..
நாமே சாட்சி! 
காண்போம் புது காட்சி..


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1