தீரா(து).. இது!

ஆயிரம் ஆசைகள் 
மனதில் -
ஆயிரம் ஓசைகள்! 
அலை அலையாய் 
மலை மலையாய்..
குறை வதில்லை! 
ஆயிரம் முறை 
போகித்தும்..
அலுப்ப தில்லை! 
அடுத்த முறைக்கு  ஆவா..
ஆ(சை)! வா யென 
அழைக்கிறது! 
பாலின வாக்கியம் 
பால்- இனம் 
அவ்வளவு பாக்கிய மா!
உணர்வுகளின் 
உணர்ச்சி களின் 
பாக்கி இயமா..
இயக்க மா!
அது-
இயல் பான தா
இல்லை 
இயற்கை யான தா!
மென்றவர்கள் அனேகம் 
வென்றவர்கள் இல்லை! 
பின் - ஏன் 
யாரும் கொன்று விட்டு 
போ வதில்லை..
அதை!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1