என் ஆண்டாளின் பெருமை அன்று-அவள் காத்த பொருமை காதலால் கடவுளைச் சேர்ந்த உவமை! ஒரு கோடி மலர் கூடி உருவானவள்-அக் கோதை மலர் சூடித் திருவானவள்! தரத்தில்லே தங்கத்தின் நிறமானவள் தவத்தில்லே திருமாலின் நிழலானவள்! நினைவிலே அவனை நீங்கா தவள் நினைக்கையில் கண் தூங்காதவள் பெண்யின வர்க்கத்தில் உயர் வானவள் பேரின்ப உயரத்தில் மேலானவள்! குழந்தை யாய் காது கொடுத்து கதை கேட்டவள் ஶ்ரீ ரங்கத்து நாயகனை தனக்கென்று காயத்தில் சேர்த்த வள்! கணவனை கடவுளாய் பார்த்த பெண் இனம் அந்த-கடவுளையே கணவனாய் பார்த்தது இவள் மனம்! பெண் யென்றால் பேயும் யிறங்கும் பேச்சுக்கு... ஆனால் -அந்த பெருமாளு(னு)ம் இறங்கினார் அவ மூச்சுக்கு! பெண் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை ஏளனம் கடந்து ஏழ்மை கடந்து-அந்த ஏகாந்த மூர்த்தி யை மனமுடித்து காட்டிய திலகவதி! ஆழ்வார்கள் இடையே திகலும் யுவதி நாயன்மார்களைத் தெரியும் ஆழ்வார்களைத் தெரியும் இந்த தாயின் மாரைத் தெரியுமா அந்த ஆண்டாளைத் தெரியுமா! ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண் ஒருத்தி-அவ மனம் நிறுத்தி-திரு மண் பொறுத்தி... பருவத்தில் வளரும...
கல்லணை...! கல்லால் கட்டப்பட்ட அணை! காவிரி குறுக்கே வெள்ள பெருக்கை பெரும் நீரை... கல் யானையாய் நின்று தடுக்கும் அணை தடுப்பணை! இதற்கு இல்லை ஈடு இணை... சோழப் பாட்டன் கொடுத்த கொடை கொடுப்பினை! அவன் காவியத்தலைவன் முதுப்பெரும் கலைஞன் மூத்தச் சோழன் தன்நிகரில்லா தமிழன் சத்தியம் காத்தவன் சரித்திரம் படைத்தவன் விசித்தர மானவன் சான்றோர் கூற்று சரணமாய் ஏற்று சைவத்தை பற்றி சிவத்தைப் போற்றி ஞாயறாய் வாழ்ந்தவன் திங்களாய் திகழ்ந்தவன்! வேளா(ல)ன் வேதனையின் வேர் அறிந்தவன் மழை இல்லா வேளையிலும் பிழைஇல்லா நீர்த் தேக்கி பயிர்தழைக்க அணை கட்டியவன் தமிழகத்திற்கு தடுப்பணையை தகப்பனாய் அறிமுகப்படுத்தியவன்! ஈர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருபது நூறாண்டுகள் ஐம்பது தலைமுறைகள் 2400 சித்திரை 24000 பௌர்ணமி கள் கண்ட அணை... என்ன சொல்லது அந்த தெம்பை எப்படிச் சொல்வது அந்த பண்பை கல்லால் கட்டிவைத்தான் தன் அன்பை! அணையாய் அழியாப் புகழாய்-யாரும் அறியா புதிராய்... ஊர் மகிழ உணவு பெருக பயிர் செழிக்க வளம் கொழிக்க மழைபெற வான்மகிழ வரப்புயர மக்கள் ...
Comments
Post a Comment