அதுவும் இதுவும்- ஒன்னா..!
நண்பா!
அன்பும் அரசியலும்
ஒன்னா..!
ஆதங்கப் படுவது
அவசரப் படுவது
அமைதியாக கடப்பது..
அடிமை யாய் இருப்பது!
ஆரம்ப அரவனைப்பு
பின்- அந்தரங்க ஆராய்ச்சி..
சமர்ப்பணம் அப்புறம்
விமர்சனம்!
ஆனந்தமாய் பார்த்த-அதை
அசிங்கமாக பார்ப்ப அது!
தேன் ஒழுக பேசுவதும்
பின்- தேவை இல்லா
கூந்தலாய்..
கொடுக்கப் பட்ட வாக்குறுதி
மறக்கப்படும் வசதியா
இறுதியில்!
வீதியில் விசாரிப்பு
விழாவில் சந்திப்பு..
உயர்ந்த பிறகு உதாசீனம்!
உயரும் வரை உடுத்திக்
கொள்ளும்
உறவு முறை - உடைகளாய்..
மனசாட்சி மட்கும் தன்மை!
வெளிப்புற வெண்மை
சாதித்த தும் - இதில்
சாதிப்ப தும் என்ன?!
மனச் சிறையில் - அல்லது
மரணச் சிறையில்..
சொத்துக்களே சொந்தங்களாய்..
நிலை மாறாது - ஆனா
அதன் விலை மாறும் !
பாதிக்கப்பட்டவன் எப்போதும்
பாவப்பட்டவன்!
பரிதாப சூழல் - அதிலும்
ஆதாயம் தேடும்!
வென்றால் உச்சி முகரும்
விட்டுச் சென்றால்
எச்சில் உமிழும்!
பாக்கியம் உண்டு
பத்திரமாய் இருந்தால்..
அளவிற்கு மீறினால்
உதவி கெடும்- அதில்
பதவி கெடும்!
உருட்டல்- உண்மை மிகும்!
ஏதும் உத்திரவாத முண்டோ
கெடா அது இருக்க?!
மருந்தால் ஆகாதது
மறந்தால் ஆகும்!
அது போலத் தானே
இதுவும்!
அன்பும் அரசு இயலும்
ஒன்னா..
Comments
Post a Comment