விவாதம் போதும் - விடை தேடு..!
விமர்சனங்களும்
விவாதங்களும் - வீணாகி
போய் விடக் கூடாது!
அரசியல் வேண்டுந்தான்..
அதிகம் நோண்டக் கூடாது!
அப்புறம் - அது
குரங்கு கையில் கருவாடாய் போகும்!
அவசரப்பட்டு முழுதும்
உரித்தாலும்..
பொறுமையா மெதுவா
காய வைத்து உரித்தாலும்
பின்பு- வெறுங் கைதான்!
தேர்தல் நேரத்து - அவலாய்
மென்று விட்டு போவோம்..
முலைச் சூடு - நிரந்தரமும்
இல்லை!
அதை நிராகரிக்கவு மில்லை..
பொழுதும் முகம் புதைக்க
முடியாது!
போர்வைக்குள் பேசி
பயன் என்ன?!
வெறும் மரத்தை சுற்றி
வந்தால் பிள்ளை வருமா..
ஆயுதம் ஏந்த வழியில்லை
அதற்கு- தயாரில்லை!
ஆனா- போர் விமர்சனம்
போதும் அளவிற்கு..!
நலன் வேண்டிக் கொள்வோம்
பலன் குன்றாது!
ஜெயிக்கும் கட்சி
பெரும் பான்மை பெறட்டும்!
தொங்கு மக்கள் அவை
அவை- மக்களுக்கு
தீங்கு ஆகும் !
பின்- ஆட்சி வேண்டி
மா(கா)ட்சி மாறும் !
தொங்கினால்
துவளும் கட்சியு முண்டு
துள்ளும் கட்சியு முண்டு..
காணகூடாதது
காண வேண்டி வரும்!
நடக்க கூடாத அது
நடந்(து) தேறும்..
ஆக- இன்னொரு
தேர்தல் செலவை
நாடு தாங்காது..
அத் தேவை இல்லாது
இத் தேர்தலை கடவோம்!
அதற்கு - தயங்காது
ஒழியாது மறையாது
வாக்கு செலுத்து வோம்!
சாக்கு சொல்லாது..
வென்றவர்கள் உதவட்டும்
நடுவன் அரசு - நல்ல ரசாக
நாடு வல்ல ரசாக!
வாழ்க பாரதம்!
வாழ்க தமிழகம்!
Comments
Post a Comment