வரட்டும் முடிவு.. தரட்டும் விடிவு!

வணக்கம் அன்பரே! 
வணக்கம்.
ஓட்டு போட்டீங்களா..
ஆமாம்! 
எதுக்கு போட்டீங்க..?
இது என்ன கேள்வி 
எனக்கு ஓட்டு இருக்கு 
அதுதான்  - போட்டேன்! 
அய்யோ- அது இல்லை 
எந்த கட்சிக்கு..ன்னு 
கேட்டேன்!?
இது- இது நல்லா இல்ல..
நல்லது மில்லை! 
சொன்னால் சுயம் கெடும்! 
இருந்தா- ஆளும் 
நீங்க! - கேட்டதற்காக 
சொல்றேன்..
மாற்றம் வேண்டி (எனக்கு)
மாத்திப் போட்டேன்..
ஆனா! - நீங்க நினைக்கிற 
கட்சிக்கு  அல்ல..
இந்த தடவை  எது
வேண்டு மென 
முடிவெடுக்க வில்லை..
எது வேண்டா மென
முடிவெடுத் தேன்! 
அதுதான்-
போன முறை போட்ட 
கட்சிக்கு  - இந்த முறை 
போடவில்லை! 
இந்த முறை போடாத
கட்சிக்கு- போன முறையும் 
போடவில்லை! 
போன முறையும் 
இந்த முறை யும் 
போடாத கட்சியும் 
ஒன்று தான்..
ஆனா-
போன முறை - ஓட்டு 
வே ரொன்றுக்கு..
இந்த முறை 
வேர் ஒன்றுக்கு! 
பழகிய சின்னத்திற்கு 
கை போனது..
ஆனா மூளை -
கட்டளை மாற்றிய அது! 
என்ன செய்றது சார்
இந்த அரசியல் கட்சிகள் 
நம்மை அப்படி 
ஆக்கி விட்ட அது !?
போதா குறைக்கு 
நண்பர்கள் வேறு குருப்பில் 
இது சரியில்லை 
அது சரியில்லை..
இது வந்தா சரிவராது 
அது  வந்த ஆ! - சரிவராது 
ஆனா- எது வந்து ஆளும் 
அது- சரிவராது..ன்னு
நமக்கு தோணுது..!
ஆக- அப்பத் தான் 
ஒரு முடி வெடுத்தேன்! 
அதன் படி என் மனசாட்சியை கேட்டு-
அதுவும் இப்படி தான் 
எனக்கு சொல்லுச்சு
நானா முடி வெடுத்து 
நல்லா- சிவப்பு பட்டணா 
பார்த்து அமுக்கி..
பீ.. பீங் சத்தம் வர..
என் வாக்கை பதிவு 
பண்ணி நே-ஏன்!?
அப்பாடா- கடமை முடிந்தது!
இனி - தேர்தல் முடிவுகள் 
அது வரட்டும்..
அப்ப பார்க்க லாம்! 
அதுவரை 
காத்து இருப்போம்!
என்னா நா சொல்றது..
நம்ம கையில் என்ன 
இருக்கிறது..
ஒட்டு போட்ட அடையாளத்தை  தவிர!
அது அழியும் முன் 
ஆட்சி அமைக்கும் 
கட்சி(களு)க்கு வாழ்த்துரை 
எழுது வோம்! 
புதிதாக ஏது மிருந்தால் 
வந்தால்.. பயம் விடும்  
பழையதாய்- பழகியதாய் 
இருந்தால்  - வந்த ஆல் 
பழகி விடும்..
என்ன நாஞ் சொல்றது! 
நன்றி 
நண்பரே!


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1