சின்ன குட்டி வுடன்.. ஒரு லூட்டி!

காலையில் சிறு
உரை நடை..
ஒரு கடையில்! 
சிறு குட்டி 
படு சுட்டி யுடன்!
ஒட்ட வெட்டிய கிராப்பு 
வெளிர் பச்சையில் பிராக் 
பளிச் சென்னு  பல்-
காட்டிச் சிரிப்பு! 
தலை சாய்த்து 
பதில் சொல்லா பார்வை..
உன் பெயர் என்ன பாப்பா?
பாட்டி- இவர் 
என் பெயர் கேட்கிறார்..
சொல்லு தங்கம்! 
ம் ஹூம்.. 
தலை ஆட்டி மறுக்க..
அழகு! - சரி 
என்னா ஊர் நீங்க 
சென்னை!  - குட் 
சென்னை யில் எங்கே
இருக்கீங்க!? 
வீட்டில தான்..
அய்யோ!  
என்ன படிக்கிறீங்க..
A B C D
அட ங்க ..
எந்த ஸ்கூலில்! 
கையில் விசில் வச்சுட்டு 
ஒரு  PT வாத்தியார் 
இருப்பாரே..
அந்த ஸ்கூல்!
சூப்பர்!  அசத்தல் 
குட்டிம்மா! 
இன்று-
ஒரு வேளை மாத்திரை 
மிச்சம்! 


Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1