கடமையை செய்வோம்..!
அன்பர் அவர்களுக்கு!
இன்று- ஆறு மணி ஓட..
ஓய்கிறது பிரச்சாரம்!
அதன் பின் பரப்புரை
அபச் சாரம்!!
சிறப்பு - உரைக்காது இருப்பது!
மணி- ஆறுக்கு அப்புறம்
ஆறாய் ஓடும் மனி..
மனி-தன் வேலையை
செய்யும்!
யாருக்கு ஓட்டு போட
தேவா!
எதுக்கு போட..
யாருக்கு என்பதில் கருத்து
வேறுபாடுகள் உண்டு!
அது - சுதந்திரம்
எதுக்கு என்பது- அது தவறு
கடமையை செய்..
பலனை- அனுபவி!
அதுக்கு ஓட்டு போடவா
இதுக்கு போட வா!
அது சரி வராது
இது பயன் அளிக்காது!
அப்ப - அ(டுத்த) அதுக்கு..?
ம் ஹூம் ம்.. அது வீண்!
இவர்கள் இதுவரை
பிடுங்கிய ஆனிகள் எல்லாம் வேண்டாத அவை!
ஏணியாக சிலருக்கு..
சொல்வதுண்டு!
பின் மாற்றம்.. எப்படி?!
சரியில்லாத இரண்டில்
சாய்ஸ் - எங்கே? எப்படி!
தேர்ந் தெடுப்பது..
மாற்றம் மனதில் இருந்தால் - போதுமா!?
சமுதாயத்தில் வேண்டா மா
வளரும் சந்ததியினருக்கு
சொல் வோம்!
வெறும் சன கூட்டம்
சனநாயகம் ஆகாது!
பிழைக்க வழிச் சொல்லட்டும்
உழைப்பு அதை வெல்லட்டும்!
இலவசங்கள் இலட்சியங்கள் - அல்ல
அவை அதை கொல்லும்!
மருத்துவமும்- கல்வியும்
இலவச மானால் - அது
பெருமை கூட்டும்!
மிகப் பெரிய வளர்ச்சி
ஈட்டும்!
விவசாயம் பெருகனும்
வீண் சாயம் விலகனும்!
அதற்கு வழி சொல்லும்
அரசு இயல் கட்சிக ளேது!
சுயேட்சை ஆக பார்க்கலாம்
என்றால்..
அதற்கு பவர் இல்லை!
நோட்டா வை நோக்கினால்
நோய் தீரா..
என்ன செய்யலாம்!
இருப்பதில் நல்ல அவரை
பார்ப்போம்..
ஏமாற்றம் உறுதி
ஏன்- மாற்றம் இல்லை
அது இறுதி
நமது வசதி- மறதி..
எப்படி யும் நமக்கு
பிடித்தவர்கள் வரப் போவதில்லை
பிடிக்காத அவர்களுக்கு
நமது வாக்கு இல்லை!
அது - பொல்லாத அது
நாக்கு போல..
அடக்கி வாசிப்போம்!
நாளை - (மறுநாள் )
கடமையை செய்வோம்
பயமின்றி எதிர் கொள்வோம்!
பலன் - பயனாகட்டும்
நன்மை பயக்கட்டும்!
நாடு வளர..
நாமும் வளர் வோம்!
இது - நமக்கான அது.
Comments
Post a Comment