நடவு செய்வோம்..!
ஓட்டுறவன் திறமை
விழுகிற வரைக்கும்..
ஆணவத்தின் தலைமை
தோல்வி காணும் வரை!
ஓடுறவன் சாதிப்பான்
சாதித்த அவன் - நில்லாது
ஓடுவான்!
வழி நின்றவர்
நின்று தங்கியவர்
சந்திப்பர்..
பிரச்சினை கள்!
நமக்கு எதிரே அல்ல
எதிரியு மல்ல..
அது- நமக்கு எதிருக்கு
எதிராக- நமக்குள்ளே!
சொக்க தங்கம்
உருபடி ஆகாது!
எதிலும் -
சொக்கி தங்கினால்
உருப்படி யாகா!
வெற்றி எளிது
தோல்வி காணாது வரை !
தோல்வி பயம்
வெற்றி காணாது வரை!
எதுவும் நம் கையில் இல்லை
அது பிறரிடமும் இல்லை!
இலக்கு நோக்கினால்
பயணம் எளிது..
தேக்கினால் - பயணம் வலிது!
சுக வாசல் - எல்லோருக்கும்
திறந் திருக்காது!
சிலரை தட்டச் சொல்லும்
பலரை முட்டச் சொல்லும்..
பயனும் - நலனும்
விலகாது பயணப்பதிலே!
எளிதில் பழக்கம்
எதிலும் வழுக்கும்..
வழுவாத தடம்
நழுவாத திடம்
உடன் இருப்பின்
உயர்வு கொள்ளும்- உன்னை
உயர்த்தி சொல்லும்!
வெற்றி யின் வாசல் ஒன்றே
அதன் வழி மட்டும்
வெவ் வேராய்..
தீர்க்கம் என்று ஏதுமில்லை
முடிவென்று எதிலுமில்லை!
நிரந்தர மில்லாத-அதை
நிரந்தர மாய் நினைத்து
நித்தம் நடக்கும்- நடத்தும்
யுத்தமாய் போனதோ
உத்தமனின் முத்துமணி
நாள்கள்..
நேற்றைய வெற்றி - பதிவு
நாளைய வெற்றி - கனவு
இன்றைய வெற்றி - நடவு
கனவு வேண்டி
நடவு செய்வோம்..
நாளை அது - நம்
பதிவாகட்டும்!
அது வரை - பயணம்
பசுமை ஆகட்டும்..
ஆக்கட்டும்!
Comments
Post a Comment