வெற்றி மறுப்பதற்கில்லை.. ஏற்கிறோம்!
நல்லது!
வாழ்த்துக்கள் பல..
அகில இந்திய அதிசயமாக
நீர்..!
ஆன்றோர் சான்றோர்
எம் போன்றோர் - பெரும்
வியப்பு மிக்க வெற்றி!
மூன்றாம் முறையாக - பாரத
பிரதமராக
பிரமாதமான உமது
வெற்றி - பயணம் தொடர..
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்!
திரு மோடி அவர்களே
உமக்கு பெரும் பான்மை தான்
மறுக்கவில்லை
ஏற்கிறோம்!
ஆனா - உமது கட்சிக்கு
ஆட்சி அமைக்க
அறுதி பெரும்பான்மை
இல்லை
நினைவிருக்கட்டும்!
உங்களது வெற்றி
மறுப்பதற்கில்லை..
ஏற்கிறோம் - வரவாய்
ஏற்கிறோம்!
வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்
எமது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்!
ஏதோ! - ஒரு வகையில்
உழைப்பும் - ஓர்
எதிர்பார்ப்பும் உங்களிடம்
உள்ள படியால்
இவ் வெற்றி சாத்தியம் ஆனது!
பெரும் சக்தி ஆனது..
உண்மையாகவும்
உன்னதமாகவும் செயல்பட்டு
நாட்டின் வளர்ச்சிக்கு
வித்திட்டு ஐந்தாண்டை
கடவுங்கள்..
அடுத்த தேர்தலுக்கு - அது
நடவாகட்டும்!
அய்யா!
நூற்றி நாற்பது கோடி
மக்களின் மனநிலை
எண்ணங்கள் வேறானவை
ஆனால் - ஏதோ ஒரு
காரணத்தினால் உங்கள்
வெற்றிக்கு அது
வேர் ஆனவை!
இம்முறை - எளிதில்
கடத்தி விட முடியாது..
எதையும் காரணஞ் சொல்லி
கடந்து விட முடியாது!
மக்கள் விழிப்புடன்
பார்ப்பார்கள்..
நீங்கள்! - முழிப்பு டன்
செயலாற்றுங்கள்!
நீங்கள்!
நினைத்த அதை சாதிக்க..
நின்று நிலைத்து சாதிக்க
இது ஒரு வாய்ப்பு!
இன்னுமொரு சந்தர்ப்பம்..
தெரியாது
தவற விடாது
காரிய மாற்றுங்கள்..!
மதம் - அதன் வழி செல்லட்டும்
சாதி- சார்ந்து நிற்காதீர்கள்
இறை - நம்பிக்கை
இயல்பாக ட்டும்!
அது- மொழி ஆகட்டும்
முறையாக ட்டும்..
எதையும் திணிக்காதீர்கள்!
வடக்கு மட்டுமல்ல
கிழக்கு மத்தி மட்டுமல்லாது
தென் மாநிலங்களிலும்
உங்கள் வெற்றி படர்வதை
நினைந்து பாருங்கள்
நினைவில் கொள்ளுங்கள்!
பலது கைவிட்டாலும் - சிலது
உங்களை கை தூக்கி விட..
ஒட்ட தேசமும்
சாளுக்கிய மும் - இன்று
சான்றாய்!
சேர தேசத்திலும் ஒர் அம்பு
பாண்டிய சோழ பல்லவ
மறவர்கள்
உங்களை மறக்க வில்லை..
மறுத்து இருக்கிறார்கள்!
நல்லவர்களாக நடிப்பது வேறு
நடப்பது வேறு..
உண்மை நடை பழகுங்கள்!
ஒரு தாய் மக்க ளென
எண்ணம் நிலைக்கட்டும்
நினைக்கட்டும்..
அது என்றும் வளரட்டும்!
இனி தனி ராசா
காட்டாட்சி இல்லை!
தரமான கூட்டாட்சி
தத்துவமாய் மிளரட்டும்
ஒளிரட்டும்..!
சாதனை என்று சாதித்தவன்
சொல்வதில்லை
சோதனை என்று உணர்ந்தவன்
கொள்வதில்லை!
பலரது பார்வை
பயனும் பலனுமாய்..
எனது பார்வை வேறு மாதிரி!
நலனும் நன்மை யுமாய்..
நடுநிலை விரும்பி அல்ல
நான் - நாடு நலன் விரும்பி!
ஏகாந்தம் கொள்ளாது
ஏக- நிதானம் கொள்க
காழ்ப்புணர்ச்சி விடுத்து
காரிய வளர்ச்சி தொடுத்து
வித்திடுங்கள் -
எதையும் வித்து விடாதீர்கள்
புதிதாக விதைத்திடுங்கள்!
தொலை நோக்கு பார்வை
வேண்டுந் தான்
வல்லரசு ஆக! - மக்களின்
நல்ல அரசு ஆக..
தொல்லை நோக்கம் வேண்டா
அடுத்த தேர்தலில் - நீங்கள்
தேடி வர வேண்டாம்
நாங்கள் உங்களை நாடி
வருமாறு..
ஆட்சி தாருங்கள்
ஆளுமை செய்யுங்கள்!
அண்மை செய்திகள்
அந்நிய மாகட்டும்..
நடந்தவை - நடப்பவை
நன்மை பயக்கட்டும்!
பேரம் பேசி சோரம்
போகாதீர்கள்..
பாரமில்லை மடியில் என்றால்
தூரமில்லை எதுவும்!
அனைத்து மக்களின் தேர்வாக
நீங்கள் இல்லாவிட்டாலும்
அநேக மக்களின் தேர்வாக
தானே வந்தீர்கள்!
மறுப்பதற்கில்லை
ஏற்கிறோம்!
புது அம்பு(ம்) வழி காட்ட
மிதிவண்டி ஏற்றிச் செல்லும்
அல்லது - கூட்டிச் செல்லும்!
வழங்குங்கள் நல்லாட்சி
வாழ்த்துகிறோம்..
இந்த வைகாசி
புது நிலவு நாளில்
தொடங்கட்டும் உங்கள்
பயணம்..
அது தொடரட்டும்
நில்லாது ஐந் தாண்டு!
வாழ்த்துக்கள் பல..
வாழ்த்துகிறோம்!
வாழ்க பாரதம்!
வளர்க பாரதம்!
என்றும் அன்புடன்
தேவா.
Comments
Post a Comment