கடல் தாண்டி ஒரு பயணம்!

கடல் தாண்டி ஒரு 
பயணம்! 
ஆகாய மார்க்கமாக 
ஆனந்த மாக்கியது..
மகளது அழைப்பு 
மனதின் பூரிப்பு !
எனது துணைக்கு 
துணையாக நானும்!
அவளுக்கு முதல் அனுபவம் 
ஆகவே பயணத்தில் 
முழு கவனம்!
பெங்களூரு 
விமான நிலையம் 
வியப்பாக இருந்தது 
கத்தார் - தோகா நிலையம் 
பார்க்கும் வரை..
பரந்து விரிந்து 
ஓர் ஊர் போல்..
காட்சி அளித்தது!
விமானங்கள் வரிசை கட்டி 
நம்மூர் - பேருந்து நிலையத்தில் 
நிற்கும் - பேருந்துகள் போல்!
ஒரு நகருக்கு உள்ள 
பரப்பளவில் - பளபளப்பாக..
பார்க்க பார்க்க வியப்பாய் 
வியந்து - விழுங்கியது 
விழிகள் இரண்டும்(நான்கும்)
விதவிதமான மனிதர்கள் 
வேடிக்கையாய் எனக்கு!
வெகு நாள் ஆசை 
வசந்த மாளிகை - படம் 
பார்த்த திலிருந்து..
தரையில் தனியாக 
மலையில் மறைந்து 
அருவியில் அறைகளில் 
அனுபவித்து விட்டோம்!
மகா நடிகர் போல் 
ஆகாயத்தில் பறக்கும் போது 
சுக பானம் 
அது உம்..
நிறைவேறியது!
சிரித்து விளித்து 
பரிமாறப் பட்டது!
ம்யூனிக் - ஜெர்மன் (தெற்கு)
நகரில் தரை தொட்டது!
மண் மிதிக்க ஆவல் 
முதல் இரண்டு நாட்கள் 
வாய்ப்பே இல்லை!
எங்கும்
 காங்கிரிட் தரை தளம் 
பேருந்து - விரைவு ரயில் 
அடிக்கடி அதிகமாக..
எங்கு(ம்) செல்வதற்கு எளிதாய் 
சாலை எங்கும் சிற்றுந்து 
சீற்றமாய்..
சாலை யோரத்தில் 
நடை பாதை 
அருகிலே மிதிவண்டிக்கு
தனி பாதை!
என் காதை
தொடரும்..

தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1