ஜெர்மன் நகரில்..!
நகரும் நாள்கள் - என்னோடு
வியந்த வை - வியக்க
வைத்தவை - அதை நான்
பகிர்ந்த வை..!
கைபேசி கலாச்சாரம்
இங்கேயும் - ஆனா
அவை - தேவைக்கா
தேடலுக்கா - இல்லை
பொழுது போக்கா..
தெரியவில்லை!
புகைப்பான் இங்கு
பகைப்பான் இல்லை
பொது விடத்திலும்..
பொதுவாய் போனது!
இதில் - பால் முறை
பேதமில்லை..
எனக்கும் - அது
வசதியாக போனது!
ஆனாலும் -
மகளதி-காரம்..!
அன்பும் அதட்டலும்
அலட்டலாய்..
கவனிப்பும் கண்டிப்பும்
கர்சனையாய்..
கண்டிசன் பெயிலில்
வாரம் இரண்டு மட்டும்!
பாக்கெட் களாக..
பெண்கள் ஆண்கள்
அனைவரும் -
உடல் வாகுவுடன்..
பெண்கள் - ஆகா!
முன்னாடி வருவோர்
எல்லாம் - கலர்
கண்ணாடி அணிந்தே
பள்ள மேடு தெரியாது
சிறு மடு வாய் - முகடாய்
குன்றை பிளந்தது போல ..
பிட்டம் தூக்கி - துர்த்தி ஆட்டி
பலதும் - பல வகையாய்
இருந்தாலும்
அழகு அழகு தானே!
முக நகையுடன்
பார்க்கும் போது..
கழுத்தில் காதில்
பெரிய அணிகலன்கள்
ஏதுமில்லை!
உடுத்தும் துணிகள் மட்டுமே
பார்க்கவும் - பார்த்ததும்
பரவசம்!
சோர்வில்லா மனிதர்களை
காணும் போது!
அண்டை வீட்டில்
அவசிய பேச்சு மட்டும்!
மலர் செடி- வளர் கொடி
தோட்டம் பராமரிப்பு
பெரிதும் மதிப்பாக
வீடுகளின் அழகுக்கு
அழகு சேர்க்கின்றன..
பாசை புரியவில்லை!
பாவனை கள் பேசுகின்றன..
ஆயிர மிருந்தும்
ஆனந்த மிருந்தும்
ஆசையில் ஆலாய் பறந்தாலும்..
நகரம் நல்லாத்தான் இருக்கு
ஆனா - நம்ம ஊரு போல
வருமா..!
இன்னும் வரும்..
அன்புடன்
தேவா.
Comments
Post a Comment