ஜெர் - மண்ணீல்..!

ஜெர்-மண்ணீல்.. !

அதைப் பற்றியே 
எனை சுற்றி யே..
நான் பார்த்த அதும் 
பார்த்து ரசித்த அதுவும்..
உங்கள் பார்வைக்கு!
பெரிது கேப்பீன் 
பெருமை சொல்வேன்!
ந்றைய உண்டு - அதில் 
நிறைவு முண்டு!
மழலைப் பேரு
மகப்பேறு..
அதை பின்னர் பார்க்கலாம்!
வளர்ப்பு - அது மலைப்பு
ஆடைகளில் அக்கறை 
அது கவசமாக.. 
அதீத கவனமாக!
நடை பயிலும் வரையில் 
சக்கர வண்டியில் தான் 
பயணம்!
வாரிசுகளை 
வாரிச் சுருட்டி யே 
எங்கும் செல்கிறார்கள் 
தூக்கி சுமக்க தோல்பை
மற்ற படி இழுவை வண்டிகள் தான்!
சிறுவர்கள் - மிதிவண்டி
உந்தி தள்ளும் உருளை
வண்டியைத் தான் 
அதிகம் பார்க்க முடிகிறது!
அதுவும் தலை கவசம் அணிந்தே..
சிறுவயது முதலே 
கால் பந்தாட்ட பயிற்சி!
தனித்து விளையாட
பயிற்றுவித்தல் - தனி சிறப்பு 
கல்வியும் ஆறு வயது முதல்!
கால்பந்து ஆட்டமே..
இங்கு - காதல் கொண்டாட்டம்!
போட்டிகள் காண பெருங் கூட்டம்!
அதிலும் உலக தர போட்டிகள் என்றால்..
கேட்கவே வேண்டாம்!
சாலையில் கூட - கூச்சலும் 
கொண்டாட்ட மாய்!
பக்கத்து நாட்டார் வருகை..
மைதானம் முழுவதும் 
மக்களாய் தெரியும்!
இங்கு நானும் - 
வெளி நாட்டான்
அயலான் - அந்நியன் தானே 
அவர்களுக்கு!
மௌனமே - பொது மொழியாய்
நகைப்பே - சினேக மொழியாய்
வேதனைகள் இருக்கும் போல 
 சிலருக்கு -
முகத்திலே - பய மொழியாய்!
எப்பவாவது கேட்கும் 
எம் மொழியும் 
செம்(மை) மொழியாய்!
உலகை கைப்பற்ற 
மாபெரும் தலைவனாய் 
உருவெடுக்க
மிக பெரிய - சர்வாதிகாரி யாக
இப்பெரும் நாட்டை
ஆண்டு - மாண்ட
முக மிருக்க - சிறு மீசை 
கொண்டவரும் - பலரை
தன் போக்கில் 
கொன்ற வரும் - திரு மிகு
அந்த திருவாளர் அவர்களுக்கு 
ஏதும் -
நினைவு தூண்களோ
சிலைகளோ - பெரும் 
சதுக்கமோ - வெறும் 
கல் தூணோ - அவர் பற்றி 
எந்தவித அடையாளமும் 
கூறும் வண்ணம் 
காண்பதற்கு ஏதுமில்லை..
எங்கு மில்லை!
வாடிக்கை மாறாது 
வேடிக்கை பார்த்த - அதை
மேலும் கூறுவேன்!

இன்னும் வளரும்..

அன்புடன் 
தேவா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1