அன்பு மகனுக்கு..!

அன்பு மகனுக்கு!
ஆசிகள் ஆயிரம் கூறி
வாழ்த்துகிறேன்!
இனிய பிறந்தநாள் 
நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளர்க!!
இது- அறிவுரை அல்ல 
நீ(யும்) அறிய என்னுரை..
சூது கவ்வாது 
வாது ஒன்றாது 
யாது(ம்) நமதென..
போது(ம்) என்று சொல்லி 
காப்பது நலன்(ம்)!
தோல்வி தவறில்லை 
தோற்பதும்.. தவறில்லை!
துவளாது இருக்கவே -
இருப்பதே கூடுதல் பலம்!
பலம் குன்றி பணம் 
சுகந் தரா..
சுயமிலக் காத(ல்) செயல் 
சுதந்திர மாக்கும்!
துணிவே வெற்றிக்கு துணை 
துயரமே தோல்விக்கு இணை!
உயரப் பனை போல் 
உயர்த்திடு உனை
நிறைத்திடு உன்னை..
உயர்ந்து விடுவாய் 
திருவாய் பின்னே!
சினம் கொல்லாது 
வினை வெல்லாது..
விதி மாற - மதி சமை!
நீங்காத நிதானம் -
நிறைவு தரும்..
நிறைய தரும்!
மன நிறைவே -வாழ்வின்(ல்)
உயர்வு தரும்!
உண்மை உன்னதம் - உழைப்பு!
இச்சூத்திரம் அறிந்தால்..
உற்சாகமே உடன் இருக்கும் 
உடல் வலுக்கும்!
நீ!
 உன்னை அறிந்தால் 
அந்த உண்மை அறிந்தால்..
வாழ்வு எளிதாகும்
அனைத்தும் இனிதாகும்!
இன்று போல் என்றும் 
வாழ்க வளர்க!!
இனிய பிறந்த தின
வாழ்த்துக்கள் பல..

அன்புடன்.
அப்பா.

Comments

Popular posts from this blog

வேலுநாச்சியார்! - 1

ஆண்டாள் பெருமை!

கல்லனை-1